5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவிடம் நகையை பற்றி கேட்ட பாட்டி.. ஷாக்கில் விஜயா!

Siragadikka Aasai Serial: இந்த வார தொடக்கத்தில் பாட்டியின் 80-வது பிறந்த நாளிற்கு பரிசு கொடுப்பதற்காக முத்துவும் மீனாவும் அண்ணாமலையிடம் நகைகளை கேட்க அதனை விஜயாவிடம் எடுத்துவர சொல்கிறார். விஜயா நகைகளை மனோஜிடம் கொடித்திருந்த நிலையில் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகையை எடுத்து வந்து கொடுக்கிறார். அதனை எடுத்துக்கொண்டு நகைக்கடைக்கு சென்ற முத்துவும் மீனாவும் அந்த கடையில் இது கவரிங் நகைகள் என்பதை தெரிந்துகொண்டு அண்ணாமலையிடம் கூறலாம் என்று வருகின்றனர்.

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவிடம் நகையை பற்றி கேட்ட பாட்டி.. ஷாக்கில் விஜயா!
சிறகடிக்க ஆசை
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Jul 2024 17:49 PM

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவிடம் நகையை பற்றி பாட்டி கேட்க விஜயா பயந்து நடுங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள். சீரியல்களுக்கு பிரபலமான விஜய் டிவியில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி முதல் இரவு நேரம் சிறகடிக்க ஆசை எனும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்ளும் மீனா மற்றும் முத்துக்குமாரை மையப்படுத்தி சிறகடிக்க ஆசை சீரியலின் கதை நகர்கிறது. இந்த சீரியலில் வரும் முத்துவின் கதாப்பாத்திரத்திற்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரைம் டைம் எனப்படும் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதோடு, இதன் திரைக்கதையும் விறுவிறுப்பாக செல்வதால் இதற்கான ரசிகர் வட்டம் பெரிதாகி வருகிறது. கடந்த வாரம் முழுவது இந்த சீரியலில் ஒளிபரப்பானது என்னவென்றால் மனோஜ் கடையில் உட்கார்ந்து இருக்கும் போது அங்கு போனில் பேசிய இருவர் வந்து சொன்னபடி பல பொருள்களை ஐந்து ஐந்தாக வாங்க மனோஜ் ரொம்ப சந்தோஷப்படுகிறார். கடைசியில் பில் போடலாமா என்று மனோஜ் கேட்கும் போது பில் போட வேண்டாம் இது எல்லாமே கணக்குல வராத பணம். அதனால பில்லு போடாம பொருளை கொடுக்கறதா இருந்தா கொடுங்க இல்லன்னா வேற கடையில பார்த்துக்கிறோம் என்று சொன்னதும் மனோஜ் மொத்தமா இவ்வளவு பொருள் வாங்குறீங்க உங்களுக்காக இதைக் கூட பண்ணி தர மாட்டேனா என்று பணத்தை வாங்கிக் கொண்டு பொருட்களை ஏற்றி அனுப்பி வைக்கிறார்.

4 லட்சம் ரூபாய்க்கு பொருள் வாங்கிய நபர் ஏமாற்றுக்காரர் என்பதும் அந்த நபர்களே விஜிலென்ஸ் அதிகாரிகள் போன்ற போலி நபர்களை அனுப்பி மனோஜிடம் இருந்து 4 லட்ச ரூபாயை பறித்துக் கொண்டனர். இதையடுத்து போலீஸ் ஸ்டேஷன் சென்றபோதுதான் இந்த உண்மை மனோஜ்க்கு தெரிய வந்த போது அதிர்ச்சி அடைந்து தன்னுடைய அம்மாவின் காலில் விழுந்து கதறி அழுகிறார். விஜயா அவருக்கு தர்மஅடி கொடுத்து மீனாவின் நகைகளை எடுத்து கொடுக்கிறார். மனோஜ் அதை அடகு வைப்பதற்கு பதிலாக விற்றுவிடுகிறார்.

Also read… வேறலெவல்… இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் வொர்க்கவுட் வீடியோ

இந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் பாட்டியின் 80-வது பிறந்த நாளிற்கு பரிசு கொடுப்பதற்காக முத்துவும் மீனாவும் அண்ணாமலையிடம் நகைகளை கேட்க அதனை விஜயாவிடம் எடுத்துவர சொல்கிறார். விஜயா நகைகளை மனோஜிடம் கொடித்திருந்த நிலையில் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகையை எடுத்து வந்து கொடுக்கிறார். அதனை எடுத்துக்கொண்டு நகைக்கடைக்கு சென்ற முத்துவும் மீனாவும் அந்த கடையில் இது கவரிங் நகைகள் என்பதை தெரிந்துகொண்டு அண்ணாமலையிடம் கூறலாம் என்று வருகின்றனர். அப்போது அண்ணாமலை தனது தாயின் 80வது பிறந்த நாளை நினைத்து மகிழ்ச்சியில் இருப்பதை பார்த்து விசயத்தை சொல்லாமல் மறைத்து விடுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mask kanmani (@mask_kanmani.2.0)

தற்போது பாட்டி மீனாவிடம் அந்த நகைகள் எங்கே உடனே எடுத்து போடு என கூற விஜயா-மனோஜ் முழிக்கிறார்கள். மீனா ஏதாவது சொல்வாரா அல்லது கவரிங் நகைகளையே போட்டுக் கொள்வாரா என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Latest News