Video: ஓட்டு, தலைவன் மகனுக்கா? தொண்டன் மகனுக்கா? – வெளியானது ‘எலெக்ஷன்’ பட ட்ரெய்லர்!
Election - Official Trailer | ‘உறியடி’, ‘பைட் கிளப்’ படங்களில் நடித்த விஜய்குமார் அடுத்து நடிக்கும் படம் ‘எலக்சன்’. வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இதை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆதித்யா தயாரித்துள்ளார்.
நடிகர் விஜயகுமார் தற்போது ‘எலக்சன்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘சேத்துமான்’ பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கி வருகிறார். ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ட்ரெய்லரை நேற்று படக்குழுவினர் வெளியிட்ட நிலையில் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.