5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Video: ’ரசவாதி’ படத்திலிருந்து ‘தாய் தாய்’ பாடல் வீடியோ இதோ!

Thai Thai - Rasavathi Fusion Full Video Song | க்ரைம் – ரொமான்டிக் – ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் நடிகர் அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு சிவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 22 May 2024 10:14 AM

‘மௌனகுரு’, ‘மகாமுனி’ படங்களை இயக்கியதன் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ’ரசவாதி’.  க்ரைம் – ரொமான்டிக் – ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் நடிகர் அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு சிவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. சித்த மருத்துவரான அர்ஜுன் தாஸ் கொடைக்கானலில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவருடைய கடந்த கால விஷயங்கள் அவரைத் துன்புறுத்துகின்றன. அதற்கு அவர் என்ன தீர்வு காண்கிறார் என்பது படம். இந்நிலையில் படத்தில் ‘தாய் தாய்’ என்ற பாடல் வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் அதிக பார்வைகளை பெற்று வருகிறது.

Follow Us
Latest Stories