5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“இதயமே நொறுங்கிவிட்டது”… எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் இன்ஸ்டா போஸ்ட்!

Ethirneechal Serial: ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம். குணசேகரனால் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள் இப்போது தைரியமாக தங்களது எதிர்காலத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளார்கள். 700க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகிய இந்த தொடர் கதை, வசனம், திரைக்கதை மூலம் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவின.

“இதயமே நொறுங்கிவிட்டது”… எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் இன்ஸ்டா போஸ்ட்!
எதிர்நீச்சல் சீரியல்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 05 Jun 2024 15:46 PM

எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய நாயகியாக நடித்துவந்த மதுமிதா தனது இன்ஸ்டாவில் “இதயமே நொறுங்கிவிட்டது” என பதிவிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைல்ராக பேசப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் ஒளிபரப்பாகி வருகின்றன சீரியல்கள். சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள். பிரபல சேனல்களில் மதிய நேரங்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து TRP ரேட்டிங் லிஸிட்டில் இடம்பிடித்து வருகின்றன. பல தொலைக்காட்சிகள் பல விதமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் எப்போதும் போட்டி என்னவோ சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான், இந்த இரண்டு சேனல்களின் தொடர்களுக்கு மவுசு அதிகம் என்றே கூறலாம்.

சன் டிவியில் நடிகை தேவையானி நடிப்பில் வெளியான கோலங்கள் என்ற சீரியல் பட்டித்தொட்டி எங்கும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த சீரியலில் தொல்காப்பியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் திருச்செல்வம். இவர்தான் கோலங்கள் சீரியலின் இயக்குநரும் கூட. அந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் திருச்செல்வம் கடந்த 2022-ம் ஆண்டு எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கத் தொடங்கினார்.

2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் சத்யப்ரியா, வேல ராமமூர்த்தி, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் இந்த சீரியலிலும் நடித்து வருகிறார்.

Also read… 48 வயது ஹீரோ என்னை விட இளமையா இருக்கிறார்… ஜான்வி சொன்னது யார் தெரியுமா?

ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம். குணசேகரனால் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள் இப்போது தைரியமாக தங்களது எதிர்காலத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளார்கள். 700க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகிய இந்த தொடர் கதை, வசனம், திரைக்கதை மூலம் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவின.

 

View this post on Instagram

 

A post shared by Madhumitha H (@madhumitha.h_official)

இந்நிலையில், இந்த சீரியலில் முக்கிய நாயகியாக நடித்துவந்த மதுமிதா தனது இன்ஸ்டாவில் எதிர்நீச்சல் தொடரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழகான வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் இதயம் நொறுங்கிய தருணம், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் வாழ்க்கையில் அனைத்தையும் கடந்து தான் போக வேண்டும், முதலில் சன் தொலைக்காட்சிக்கு நன்றி. இயக்குனர் திருச்செல்வம், வித்யா மேம் இருவருக்கும் எனது பெரிய நன்றி. ஜனனி என்ற கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்ததற்கு நன்றி என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Stories