5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நாயகியாக களமிறங்கும் ‘மகாநதி’ சீரியல் நடிகை!

Mahanadhi Serial: விஜய் டிவி நல்ல வரவேற்பை பெற்ற சீரியலில் ஒன்றுதான் மகாநதி. இந்த சீரியலின் கதை ஆரம்பத்தில் அப்பா மகள்களின் பாசத்தை மையமாகக் கொண்டு தொடங்கியது போன்று இருந்தது. பிறகு அப்பாவின் மரணத்திற்கு பிறகு மகள்கள் தங்களுடைய வாழ்க்கையில் படும் துன்பங்கள் பிறகு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது போன்ற பாச உணர்வோடு போராட்டம் கலந்ததாக இந்த சீரியல் இருந்து வருகிறது.

நாயகியாக களமிறங்கும் ‘மகாநதி’ சீரியல் நடிகை!
‘மகாநதி’ சீரியல்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jul 2024 13:09 PM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ‘மகாநதி’ சீரியல் நடிகை தற்போது படத்தில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார். தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் ஒளிபரப்பாகி வருகின்றன சீரியல்கள். பிரபல சேனல்களில் மதிய நேரங்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து TRP ரேட்டிங் லிஸிட்டில் இடம்பிடித்து வருகின்றன. சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள்.

பல தொலைக்காட்சிகள் பல விதமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் எப்போதும் போட்டி என்னவோ சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான், இந்த இரண்டு சேனல்களின் தொடர்களுக்கு மவுசு அதிகம் என்றே கூறலாம். விஜய் டிவி நல்ல வரவேற்பை பெற்ற சீரியலில் ஒன்றுதான் மகாநதி. இந்த சீரியலின் கதை ஆரம்பத்தில் அப்பா மகள்களின் பாசத்தை மையமாகக் கொண்டு தொடங்கியது போன்று இருந்தது. பிறகு அப்பாவின் மரணத்திற்கு பிறகு மகள்கள் தங்களுடைய வாழ்க்கையில் படும் துன்பங்கள் பிறகு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது போன்ற பாச உணர்வோடு போராட்டம் கலந்ததாக இந்த சீரியல் இருந்து வருகிறது.

பிரபல சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கிவரும் இந்த தொடர் விஜய் டிவியில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இவர் முன்னதாக இயக்கிய சரவணன் மீனாட்சி, ராஜா ராணி போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தந்தையை இழந்த 4 சகோதரிகளின் கதையாக இந்த தொடரை இயக்கி வருகிறார்.

Also read… Indian 2: இந்தியன் 2… சென்சார் போர்டு மாற்றச் சொன்ன 5 விசயங்கள்!

இந்த நிலையில் சீரியலின் தொடக்கத்தில் 4 சகோதரிகளில் மூத்த சகோதரி கங்கா கதாப்பாத்திரத்தில் நடித்த பார்த்திபா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சீரியலில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதில் அந்த கதாப்பாத்திரத்திற்கு பாக்கியலட்சுமி சீரியல் புகழ் திவ்யா கணேஷ் தற்போது நடித்து வருகிறார்.

சீரியலில் இருந்து விலகிய பார்த்திபா தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார். அந்த வகையில் அவருக்கு மலையாள படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கொண்டல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மலையாள படத்தில் பார்த்திபா நாயகியாக நடிக்கிறாராம், விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கேட்ட ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Latest News