5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ilayaraja: “மகளை பறிக்கொடுத்தேன்.. பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை” இளையராஜா உருக்கம்!

Birthday: இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இன்று தனது 81-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். இளையாராஜாவிற்கு ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், மகளை பறிகொடுத்திருப்பதால் நான் என் பிறந்தநாளை கொண்டாட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Ilayaraja: “மகளை பறிக்கொடுத்தேன்.. பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை” இளையராஜா உருக்கம்!
இளையராஜா
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 02 Jun 2024 16:48 PM

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவைக்காண அவரது அலுவலகத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்களுடைய வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட இளையராஜா, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், இளையராஜாவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்கலை சந்தித்த இளையராஜா, இந்த பிறந்த நாள் வாழ்த்துகள் நீங்கள் தான் எனக்கு சொல்லியுள்ளீர்கள். எனக்கு வந்து நான் என் மகளை பறிகொடுத்துவிட்டதால் பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை. உங்களுக்காகத்தான் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் என்று கூறினார்.

Also Read: Indian 2: தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமையேற்க கூடாது – கமல்ஹாசன் கேள்வி

தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா, அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளாராக அறிமுகமான இளையராஜா இசைக்கு உயிர் கொடுத்தவர் என்று ரசிகர்ளால் கொண்டாடப்படுகிறார். 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுதியிருந்தார். இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் 2010-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றார் இந்நிலையில், இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த திரைப்படத்தை அருண்மாதேஸ்வரன் இயக்குகிறார். இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். இதையடுத்து இன்று நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இளையராஜா பயோபிக் படத்தின் புது போஸ்டரை வெளியிட்டு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: Tamilnadu Weather Alert: தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை.. இங்கெல்லாம் குளுகுளு கிளைமேட்.. வானிலை மையம்!

கடந்த ஜனவரி மாதம் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி பித்தப்பை புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள் இறந்த துயரிலிருந்து மீளாமல் இருக்கும் இளையராஜா தற்போது பிறந்த நாள் கொண்டாடவில்லை என்பது இளையராஜாவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை பெறும் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் தற்போதைய பிறந்த நாள் இல்லை என்று கூறியுள்ளார். இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தற்கு பல்வேறு விமர்சனங்களை பெற்று, மீம்ஸ் டெம்ளேட்டுக்களாக மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News