5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fahadh Faasil : ‘ஃபகத் பாசில் அப்போது சிறுவன்’.. நினைவுகளை பகிர்ந்த சத்யராஜ்

நடிகர் ஃபகத் பாசில் தந்தை ஃபாசில் நடிகர் சத்யராஜுக்கு இறால் பிரியாணி செய்து மதிய விருந்துக்கு அழைத்ததாகவும் அப்போது சிறு குழந்தையாக இருந்த ஃபகத் பாசில் புகைப்படத்தை பகிர்ந்து நடிகர் சத்யராஜ் நினைவுகூர்ந்து உள்ளார்.

Fahadh Faasil : ‘ஃபகத் பாசில் அப்போது சிறுவன்’.. நினைவுகளை பகிர்ந்த சத்யராஜ்
சத்யராஜ் – பகத் பாசில்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 11 Jun 2024 09:04 AM

நடிகர் சத்யராஜ் கோவையில் பிறந்து தமிழ் திரை உலகில் மட்டுமல்லாதது பல்வேறு மொழிகளில் என்று தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் வில்லனாக திரையுலகில் அறிமுகம் ஆகிய சத்யராஜ், பின்னர் கதாநாயகனாக மாறி பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களைத் தாண்டி பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கும் முதலில் குரல் கொடுப்பவராகவும் சத்யராஜ் திகழ்ந்துள்ளார். நடிகர் மணிவண்ணன் மற்றும் சத்யராஜ் கூட்டணியில் வெளிவந்த படங்கள் தமிழ் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத படங்களாக உள்ளது. இவர்கள் கூட்டணிகள் 12 படங்கள் வெளிவந்தாலும், குறிப்பாக சத்யராஜ் நடித்த அமாவாசை திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்து. தற்போதைய காலகட்டத்தில் கட்டப்பா என்று சொன்னால், இன்றைய 2 கே கிட்ஸ் வரையிலும் பிரபலமானவர். சத்யராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஃபகத் பாசில் பற்றி கூறியுள்ளார்.

Also Read: Walking backwards: பின்னோக்கி நடப்பதன் மூலம் இவ்வளவு நன்மைகளா..!

சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த ஆயுதம் திரைப்படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நடிகர் சத்யராஜ் தன்னுடைய இளமைப் பருவத்தில் இயக்குனர் ஃபாசிலின் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். அந்த பிரமோஷன் நிகழ்ச்சிகள் குறிப்பாக ஃபகத் பாசில் குறித்து சத்யராஜ் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. நெறியாளரின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த சத்யராஜ் திடீரென தன்னுடைய பழைய புகைப்படத்தை காட்டினார். அதில் இருக்கும் சிறுவன் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பலரும் யோசித்துக் கொண்டிருக்க உடனே ஃபகத் பாசில் தான் அந்த சிறுவன் என்று கூறினார்.

நடிகர் சத்யராஜ் 1987 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளில் நடித்த பூவிழி வாசலிலே பொம்மைக்குட்டி அம்மாவுக்கு ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஃபாசில். இவர் பொதுவாக திரைப்படங்களை கேரளாவில் இயக்குபவர். ஃபாசில் போஸ் பெற்ற திரைப்பட தயாராக தயாரிப்பாளராகவும் ஆலப்புழாவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது அப்போது ஒரு நாள் மதிய உணவிற்கு சத்யராஜ் இயக்குனர் வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் தான் என்று நினைவுகளை பகிர்ந்து உள்ளார். ஃபாசில் வீட்டு பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அதுவும் இறால் பிரியாணி என்றால் எப்படி இறக்கும் என்று நினைத்து பாருங்கள் அது இன்று வரையிலும் என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Also Read:Coconut Water: கிட்னி கல்லை கரைக்கும் இளநீர்.. இவ்வளவு நன்மைகள் இருக்கா?

சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி மட்டுமே தெரிந்த எனக்கு இறால் பிரியாணி மிகவும் சுவையாக இருந்தது. அப்போது சிறுவனாக இருந்த ஃபகத் பாசில் தான் என் மடியில் அமர்ந்து உள்ளார். அப்போது சிறுவனாக இருந்த ஃபகத் பாசில் இன்று அசுர வளர்ச்சியில் உள்ளார். அவர் நடித்த ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஃபகத் பாசிலுக்கு வளர்ச்சி மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் கூறிய அவர், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். சத்யராஜ் நடிப்பில் வெளியான ஆயுதம் திரைப்படம் பல்வேறு இடங்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News