5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

களைகட்டும் வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட்டம்… வைரலாகும் போட்டோஸ்!

Actress Varalakshmi Wedding: சென்னையில் நடைபெற உள்ள வரவேற்பிற்கான அழைப்பிதழை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன், பிரபு, அர்ஜூன், சமந்தா உள்ளிட்ட உச்சநட்சத்திரங்களுக்கு குடும்பத்தோடு சென்று கொடுத்தனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் நேரில் சந்தித்து பத்திரிகை வைத்தனர். அதே போல, டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்து அழைப்பிதழை கொடுக்கப்பட்டது.

களைகட்டும் வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட்டம்… வைரலாகும் போட்டோஸ்!
களைகட்டும் வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட்டம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 02 Jul 2024 13:16 PM

தாய்லாந்தில் கோலாகலமாக தொடங்கியது நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட்ட நிகழ்வுகள். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது. நடிகை வரலட்சுமி சரத்குமாரின் மகளாக இருந்தாலும், தனது திறமையால் முன்னுக்கு வந்தார். விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக நடித்த அவர், முதல் படத்திலேயே தனது சொந்தக்குரலில் பேசி,எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், இரவின் நிழல் உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்துள்ள வரலட்சுமி, தமிழ் மொழியை தாண்டி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் வரலட்சுமி. நாயகியாக மட்டும் அல்லாம வில்லியாகவும் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார் வரலட்சுமி.

கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி வரலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்த வரலட்சுமி தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். நிக்கோலாய் சாக்தேவ், ஆர்ட் கேலரி நடத்துபவர் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, சில செலிப்ரிட்டிகளுக்கு பர்சனல் புகைப்பட கலைஞரகாவும் இருப்பதாக கூறப்படுகிறது. நிக்கோலாய் சாக்தேவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், இவருக்கு 15 வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் மனைவி இவரை விட்டு பிரிந்த பின்னர்தான் வரலக்‌ஷ்மியை நிக்கோலாய் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

Also read… ”மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார் அமலா பால்” – மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு!

சென்னையில் நடைபெற உள்ள வரவேற்பிற்கான அழைப்பிதழை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன், பிரபு, அர்ஜூன், சமந்தா உள்ளிட்ட உச்சநட்சத்திரங்களுக்கு குடும்பத்தோடு சென்று கொடுத்தனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் நேரில் சந்தித்து பத்திரிகை வைத்தனர். அதே போல, டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்து அழைப்பிதழை கொடுக்கப்பட்டது.

இன்று தாய்லாந்தில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண கொண்டாட்டம் ஆரம்பாகி உள்ளது. தற்போது வரலட்சுமியின் மெஹந்தி கொண்டாட்ட போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

Latest News