5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: ரகுவரன் ’அஞ்சலி’ படத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டாரா? நடிகை ரேவதி சொன்ன சுவாரஸ்ய தகவல்

‘ஏழாம் மனிதன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நடித்த முதல் படத்திலேயே தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகர் ரகுவரன். பொதுவாக வில்லன் நடிகர்கள் குணசித்திர வேடத்துக்கு மாறும்போது தடுமாற்றம் ஒன்று ஏற்படும். ஆனால் ரகுவரனோ அதற்கும் விதிவிலக்கானவர். முகவரி, சிவப்பதிகாரம், யாரடி நீ மோகினி, சிவாஜி என அவர் குணச்சித்திர வேடங்களிலும் தனது தனித்துவமான நடிப்பை காண்பித்து அசால்ட்டாக ஸ்கோர் செய்திருப்பார்.

Cinema Rewind: ரகுவரன் ’அஞ்சலி’ படத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டாரா? நடிகை ரேவதி சொன்ன சுவாரஸ்ய தகவல்
ரகுவரன்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jul 2024 17:49 PM

நடிகர் ரகுவரன் ‘அஞ்சலி’ படத்திற்காக எவ்வளவு மெனக்கெட்டு நடித்தார் என்பது குறித்து நடிகை ரேவதி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் தனித்துவமான வில்லன் நடிகர்களில் ஒருவர் மறைந்த நடிகர் ரகுவரன். தனித்துவமான குரல் மற்றும் உடல்மொழியால் தன்னை வித்தியாசப்படுத்திக்காட்டிய ரகுவரன் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கோலிவுட் எத்தனையோ நடிகர்களை கண்டிருக்கிறது. ஆனால் ரகுவரன் போல் இதுவரை யாரையும் கோலிவுட்டால் கண்டெடுக்க முடியவில்லை. ஏனெனில் ரகுவரன் நடிப்பில் பல வேரியஷன்களை காண்பிக்கக்கூடியவர். அப்படி அவர் பல வேரியஷன்களை காட்டி நடித்த படங்கள் ஏராளம். தனித்துவமான நடிப்பு மற்றும் மிரட்டும் விதமான டயலாக் உச்சரிப்பு என தமிழ் சினிமா ரசிகர்களை தன்பக்கம் கட்டிப்போட்டு வைத்திருந்தவர் நடிகர் ரகுவரன். ஹீரோ மட்டுமல்ல வில்லன்களும் ஸ்டைலாக இருக்கலாம் என புது ட்ரெண்டை உருவாக்கி தந்தார் ரகுவரன்.

‘ஏழாம் மனிதன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நடித்த முதல் படத்திலேயே தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகர் ரகுவரன். பொதுவாக வில்லன் நடிகர்கள் குணசித்திர வேடத்துக்கு மாறும்போது தடுமாற்றம் ஒன்று ஏற்படும். ஆனால் ரகுவரனோ அதற்கும் விதிவிலக்கானவர். முகவரி, சிவப்பதிகாரம், யாரடி நீ மோகினி, சிவாஜி என அவர் குணச்சித்திர வேடங்களிலும் தனது தனித்துவமான நடிப்பை காண்பித்து அசால்ட்டாக ஸ்கோர் செய்திருப்பார்.

பொதுவாக தமிழ் சினிமாவில் வில்லன் என்றாலே கட்டுமஸ்தான உடல், மிரட்டு தோரணை, நடுங்க வைக்கும் குரல் என கம்பீரமான தோற்றத்துடன் இருப்பவரே வில்லன் என்ற வரையறை வைக்கப்பட்டிருந்ததது. ஆனால் ரகுவரனோ அதற்கு நேர்மாறானவர். ஒல்லியான தேகம், குழி விழுந்த கன்னம், அளவுக்கு அதிகமான உயரம் என வில்லனுக்கு அதுவரை கோலிவுட் எழுதியிருந்த ஃபார்முலாவை மீறி இருந்தார்.

ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்த ரகுவரனுக்கு அடுத்தடுத்து படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோவை தவிர மற்ற எல்லா கேரக்டர்களிலும் நடிக்கவே அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சினிமாவில் உள்ள அவரது நெறுங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்துக்கு மிக சிறந்த வில்லன் என்றால் அது ரகுவரன் மட்டுமே.

Also read… டூப் வேண்டாம்… நானே பன்றேன் – படத்திற்காக 16-வது மாடியில் இருந்து குதித்த அஞ்சலி?

இந்த நிலையில் ரகுவரன் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை அவருடன் நடித்த நடிகை ரேவதி கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் மனிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் ரகுவரன், ரேவதி, பேபி ஷாமிலி நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் அஞ்சலி. இந்தப் படம் வெளியாகி தற்போது 34 வருடங்களை நிறைவு செய்யப்போகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்காக ரகுவரன் எவ்வளவு மெனக்கெட்டார் என்பது குறித்து ரேவது கூறியுள்ளார்.

அவர் அந்த வீடியோவில் கூறியதாவது, அஞ்சலி படத்தில் 3 குழந்தைகளின் பெற்றோர்களாக நானும் ரகுவரனும் நடித்திருப்போம். ரகுவரனின் உயரத்தில் பாதி கூட நான் இல்லை. குழந்தைகள் என்னை விட உயரம் குறைந்தவர்களாக இருப்பார்கள். அப்போ நாங்க எல்லாம் ஒரு ஃப்ரேமில் நடிக்கும் காட்சி என்பது கேமெரா மேனிற்கு பெரிய சவாலாக இருந்தது. இதனால் ரகுவரன் அஞ்சலி படத்தில் பாதி படத்திற்கு முட்டி போட்டே நடித்திருப்பார். அவர் ஒரு இண்டன்ஸ் ஆக்டர் என்றும் நடிகை ரேவதி அவரை பாராட்டிய வீடியோ வைரலாகி வருகின்றது.

Latest News