VIDEO : கவனிக்க வைத்த கவின்.. வைரலாகும் ‘ஸ்டார்’ ட்ரெய்லர்
Star Movie Trailer : கவின் நடித்துள்ள ஸ்டார் பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது
சின்னத்திரை மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் கவின், பிக்பாஸ் மூலம் அதிகளவு ரசிகர்களை சம்பாதித்தார். பின்னர் அவர் நடித்த டாடா, லிஃப்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் கோலிவுட்டில் கவினை ஒரு முக்கிய நடிகராக அடையாளம் காட்டியது, தற்போது பியேர் பிரேமா காதல் திரைப்பட இயக்குநர் இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்துள்ளார் கவின். இந்நிலையில் ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் ஆதரவை பெற்று வருகிறது. நடிகனாக போராடும் இளைஞனாக கவின் நடித்துள்ள காட்சிகள் ட்ரெய்லரில் கவனிக்க வைத்துள்ளன. இந்தப்படம் நடிகர் கவினுக்கு மேலும் ஒரு முக்கிய இடத்தை கோலிவுட்டில் ஏற்படுத்தும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இப்படம் மே 10ம் தேதி ரிலீஸாகிறது