5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Indian 2 Review: இந்தியன் 2 எப்படி இருக்கு? வைரலாகும் முதல் விமர்சனம்!

Kamal Haasan: இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே இயக்கியுள்ளார். மேலும் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

Indian 2 Review: இந்தியன் 2 எப்படி இருக்கு? வைரலாகும் முதல் விமர்சனம்!
இந்தியன் 2
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jul 2024 10:22 AM

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 படத்தின் முதல் விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் ‘இந்தியன்’. இந்த திரைப்படம்  ரசிகர்களின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல் ஹாசன் அப்பா தந்தை என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இதில் அப்பா கமலுக்கு நடிகை சுகன்யாவும் மகன் கமலுக்கு மனிஷா கொய்ராலாவும் நாயகியாக நடித்துள்ளனர். மேலும் கவுண்டமணி செந்தில் நாசர் என பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம்  1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே இயக்கியுள்ளார். மேலும் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பல வருடங்களாக இந்தியன் 2 திரைப்படம் எடுக்க முயற்சிகள் நடைபெற்ற வந்த நிலையில், 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி இப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தியன் 2  திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின்  3 பாகம் வெளியாவதாக  படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த “பாரா பாரா” என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அடுத்து “நீலோற்பம்” உட்பட அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்தப் படத்திற்கான ப்ரோமோஷன் வேலை சென்னை, மும்பை, துபாய் என படு ஜோராக நடந்து வருகிறது. இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ட்ரெய்லரில், கமல் பல கெட்டப்களில் வருவதால், இந்தியன் தாத்தா நாட்டில் நடக்கும் ஊழலை தடுத்து நிறுத்த மீண்டும் கம்பேக் கொடுப்பது போல கதையம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.

Also read… OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் ரன்னிங் டைம் குறித்து சென்சார் போர்டு சான்றிதழ் வெளியாகி உள்ளது. அதில் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் 5 விசயங்களை மாற்ற வேண்டும் என்றும் படக்குழுவிற்கு சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி படத்தில், புகைப்பிடித்தல் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை கருப்பு நிறத்தில் மிகவும் பெரியதாக வெள்ளை நிற பின்னணியில் வைக்க வேண்டும், காட்சியில் வரும் ஊழல் சந்தை என்ற லேபிளை அகற்ற வேண்டும். குறைந்த ஆடைகள் கொண்ட அல்லது ஆடையில்லாது நடிகர்கள் தோன்றும் காட்சியில் மாற்றம் செய்ய வேண்டும். டர்ட்டி இந்தியன்’ ‘F**k’ உள்ளிட்ட வசனங்களை நீக்க வேண்டும். படத்தில் வரும் காப்புரிமை பெற்ற விசயங்களுக்கு NOC – தடையின்மை சான்றிதழ் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்துவிட்டு சென்சார் போர்டு நபர்கள் கமல் ஹாசனிடம் தங்களது கருதுவக்களை தெரிவிக்கும் பொழுது ‘படம் நன்றாக இருகிறது’ என தங்களத விமர்சனத்தை கூறினார்களாம். இதனை வெளிப்படையாக கமல் ஹாசன் கூறியுள்ளார். மேலும் சென்சார் போர்டை சேர்ந்தவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது மிகவும் அரிது என்றும் இது போன்ற பல படங்களுக்கு அவர் சொல்ல வேண்டும் என கமல் ஹாசன் கூறினார்.

Latest News