5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price Today: குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. தெரிஞ்சுக்கோங்க!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மே மாதத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஜூன் மாதத்தில் தொடகத்தில் இருந்தும் ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைந்தது. அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 190 குறைந்து ரூ.6,650க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு சவரன் ரூ.53,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Gold Price Today: குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. தெரிஞ்சுக்கோங்க!
தங்கம் விலை
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Jun 2024 10:38 AM

தங்கம் விலை: ஜூன் மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஆனால் இன்று தங்கத்தில் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மே மாதத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஜூன் மாதத்தில் தொடகத்தில் இருந்தும் ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைந்தது. அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 190 குறைந்து ரூ.6,650க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு சவரன் ரூ.53,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. ஜூன் 10-ம் தேதியான இன்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. இதனால் இன்று தங்கத்தில் விலை ஒரு சவரன் 53,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இன்றைய தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.6,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,800 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,100 ஆக உள்ளது.

வெள்ளி விலை: அதேபோல, வெள்ளி கிராமுக்கு விலை ரூ.20 காசுகள் உயர்ந்து ரூ.96.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.96,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் ஏன் முக்கியம்?

இந்தியாவைச் பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர வர்கத்திற்கு தங்கம் தான் முதல் மற்றும் ஒரே சேமிப்பாக இருக்கிறது. தங்கம் தான் சரியான சேமிப்பு என்பதால் இவர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படிதான், வீடுகளில் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது. தங்கத்தை நகைகளாக மட்டும் வாங்காமல் நாணயங்கள், தங்க கட்டிகள், தங்க பத்திரம் வடிவில் வாங்கலாம். தங்கத்தின் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாவும், நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest News