5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்: 11 பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் என்ன?

Senior Citizens Fixed Deposit: மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு பிரத்தியேகமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் முதலீட்டு திட்டங்களாகும். இந்த ஃபிக்ஸட் டெபாசிட்கள் பொதுவாக வழக்கமான எஃப்.டி-களை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இது ஓய்வு பெற்றவர்களுக்கு அல்லது தங்களுடைய பொற்காலங்களில் நிலையான வருமானத்தை தேடுபவர்களுக்கு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகிறது.

மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்: 11 பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் என்ன?
ஃபிக்ஸட் டெபாசிட்
Follow Us
intern
Tamil TV9 | Published: 09 Jun 2024 23:06 PM

மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் நீண்டகாலமாக முதலீட்டாளர்களிடையே பிரபலமான முதலீட்டுத் தேர்வாக இருந்து வருகிறது. ஏனெனில், மூத்தக் குடிமக்கள் ஸ்திரத்தன்மை மற்றும் வழக்கமான வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள். மேலும், சீனியர் சிட்டிசன் ஃபிக்ஸட் டெபாசிட்கள் இந்த மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதனால் இவை அதிக வட்டி விகிதங்கள் மற்றும் பிற நன்மைகளை வழங்குகின்றன. மேலும், மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு பிரத்தியேகமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் முதலீட்டு திட்டங்களாகும். இந்த ஃபிக்ஸட் டெபாசிட்கள் பொதுவாக வழக்கமான எஃப்.டி-களை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இது ஓய்வு பெற்றவர்களுக்கு அல்லது தங்களுடைய பொற்காலங்களில் நிலையான வருமானத்தை தேடுபவர்களுக்கு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகிறது.

அதிக வட்டி விகிதங்கள்

மூத்த குடிமக்கள் எஃப்.டி-கள் வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட்களை விட 0.25% முதல் 0.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த கூடுதல் வட்டி உங்கள் வருமானத்தை, குறிப்பாக நீண்ட காலத்திற்கு கணிசமாக அதிகரிக்கும். மேலும், பிக்ஸட் டெபாசிட்கள் ஆபத்து விரும்பாத முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக மூத்தக் குடிமக்களுக்கு விருப்பமான தேர்வாக அமைகிறது. பல்வேறு மூத்தக் குடிமக்கள் எஃப்.டி வட்டியை ஒரு நிலையான வருமான ஆதாரமாக நம்பியுள்ளனர், குறிப்பாக ஓய்வு பெற்ற பிறகு. ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் பெற விரும்புகின்றனர்.

வரி நன்மைகள்

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80டிடிபி (TTB) இன் கீழ், மூத்த குடிமக்கள் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் வைப்புத்தொகையிலிருந்து பெறப்படும் வட்டிக்குக் கழிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இது ஓய்வு பெற்றவர்களுக்கு வரிச்சுமையை குறைக்க உதவுகிறது. இதனால், வட்டி விகிதங்கள், வரி தாக்கங்கள், முதலீட்டு காலம் மற்றும் பல்வகைப்படுத்தல் உத்திகள் போன்ற முக்கிய காரணிகளைக் கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்கள் அபாயங்களைக் குறைக்கும் அதே வேளையில், தங்கள் நிதி இலக்குகளை அடைய ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளில் முதலீடு செய்யலாம்.

மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு பொதுத்துறை வங்கிகள் வழங்கும் அதிகப்பட்ச வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

  1. பேங்க் ஆஃப் பரோடா 7.75%
  2. பேங்க் ஆஃப் இந்தியா 7.80%
  3. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 7.60%
  4. கனரா வங்கி 7.75%
  5. சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா 7.75%
  6. இந்தியன் வங்கி 7.75%
  7. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 7.80%
  8. பஞ்சாப் நேஷனல் வங்கி 7.75%
  9. பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி 7.80%
  10. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 7.60%
  11. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 7.75%

இதையும் படிங்க : Post Office scheme: ரூ.5 லட்சம் முதலீடு, ரூ.10 லட்சம் ரிட்டன்!

Latest News