5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

SBI, ICICI, HDFC: கிரெடிட் கார்டு கட்டணங்கள் தெரியுமா?

Credit cards Fee: இந்த மாற்றங்கள் பயனர்கள் வெகுமதிகளைப் பெறுவதையும் அவர்களின் நிதிகளை நிர்வகிக்கும் விதத்தையும் பாதிக்கும். இதற்கிடையில், ஆக்சிஸ் பேங்க் மேக்னஸ் கிரெடிட் கார்டு உலகெங்கிலும் உள்ள விமான நிலைய ஓய்வறைகளுக்கான அணுகல், பிரத்யேக உணவு சலுகைகள் மற்றும் வாழ்க்கை முறை நன்மைகளை வழங்குகிறது.

SBI, ICICI, HDFC: கிரெடிட் கார்டு கட்டணங்கள் தெரியுமா?
கிரெடிட் கார்டு கட்டணங்கள்
Follow Us
intern
Tamil TV9 | Published: 31 May 2024 19:30 PM

கிரெடிட் கார்டு நிலுவை தொகை கட்டணங்கள்: நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட வங்கிகளின் கிரெட்டி கார்டு கட்டணங்கள் தெரியுமா? ஏனெனில், 1 ஜூன் 2024 முதல், பல்வேறு கிரெடிட் கார்டு வழங்குநர்கள் தங்கள் வெகுமதி திட்டங்கள் மற்றும் கட்டண அமைப்புகளில் மாற்றங்களைச் செயல்படுத்துவார்கள். இந்த மாற்றங்கள் பயனர்கள் வெகுமதிகளைப் பெறுவதையும் அவர்களின் நிதிகளை நிர்வகிக்கும் விதத்தையும் பாதிக்கும். இதற்கிடையில், ஆக்சிஸ் பேங்க் மேக்னஸ் கிரெடிட் கார்டு உலகெங்கிலும் உள்ள விமான நிலைய ஓய்வறைகளுக்கான அணுகல், பிரத்யேக உணவு சலுகைகள் மற்றும் வாழ்க்கை முறை நன்மைகளை வழங்குகிறது. கார்டுதாரர்கள் இந்தியாவில் உள்ள தி ஓபராய் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்ஸ் மற்றும் டிரைடென்ட் ஹோட்டல்களில் 15% தள்ளுபடியையும், நாடு முழுவதும் உள்ள 4,000 உணவகங்களில் 40% வரை தள்ளுபடியையும் பெறலாம். இது ₹5 லட்சம் வரையிலான விரிவான காப்பீடு மற்றும் 2% அந்நிய செலாவணி மார்க்அப் கட்டணத்தையும் வழங்குகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

  • ஜூன் 2024 முதல், நாட்டின் முதன்மையான கிரெடிட் கார்டு வழங்குநரான SBI கார்டு, குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கான அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு வெகுமதி புள்ளிகளை வழங்காது.
  • எஸ்.பி.ஐ வங்கியை பொறுத்தவரை ரூ.500 பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் கிடையாது.
  • ரூ.500-1000 பரிவர்த்தனை நிலுவைத் தொகைக்கு ரூ.400 வசூலிக்கப்படும்.
  • ரூ.1000-ரூ.10000 பரிவர்த்தனை நிலுவைக்கு ரூ.750 வசூலிக்கப்படும்.
  • ரூ.10000-ரூ.25000 பரிவர்த்தனை தாமத கட்டணத்துக்கு ரூ.950 வழங்கப்படும்.
  • ரூ.25,000-ரூ.50,000 பரிவர்த்தனை நிலுவைக்கு ரூ.1100 கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • ரூ.50000க்கு மேல் நிலுவைத் தொகைக்கு ரூ.1300 கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கி, ஒவ்வொரு வாடகை பரிவர்த்தனைக்கும் 1% வாடகை கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதன் உச்சவரம்பு ரூ.1500 ஆகும். இதில், வரிகள் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்படும்.
சர்வதேச இடத்தில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்தும்.

மேலும், எந்தவொரு சர்வதேச பரிவர்த்தனைக்கும் அல்லது வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட இந்திய வணிகர்களை உள்ளடக்கிய இந்திய நாணய பரிவர்த்தனைகளுக்கும், டைனமிக் கரன்சி கன்வெர்ஷன் (DCC) மார்க்அப் கட்டணமாக 1% மற்றும் வரிகள் விதிக்கப்படும்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இணையதளத்தின்படி, ஏப். 01, 2024 முதல், ரூ.35 ஆயிரம் செலவழித்து ஒரு விமான நிலைய லவுஞ்ச் அணுகலை அனுபவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு கட்டணங்கள்

  • ரூ.100 முதல் ரூ.550க்குள் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • ரூ.501-ரூ.5,000 வரை ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை ரூ.750 கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • ரூ.10,001-ரூ.25,000 வரை ரூ.900 கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • ரூ.25001 முதல் ரூ.50,000 வரை ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

  • ஹெச்.டி.எஃப்.சி வங்கியை பொறுத்தமட்டில் ரூ.100க்குள் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
  • ரூ.100-500க்கு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.
  • ரூ.501-5000க்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • ரூ.5001-10,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு தாமத கட்டணத்துக்கு ரூ.600 வசூலிக்கப்படும்.
  • ரூ.1,000-25,000க்கு ரூ.800 வசூலிக்கப்படும்.
  • ரூ.25001-50000 வரையிலான தாமத கட்டணத்துக்கு ரூ.1100 கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான பரிவர்த்தனை தாமத திருப்பிச் செலுத்தலுக்கு ரூ.1300 கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதையும் படிங்க : 20 ஆண்டுகால ஹோம் லோன்; EMI எவ்வளவு?

Latest News