5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஜோ பைடன்.. உருக்கமான அறிக்கை!

Joe Biden | கேரள நிலச்சரிவில், வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்லுகலு உள்ளிட்ட பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில், அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது.

Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஜோ பைடன்.. உருக்கமான அறிக்கை!
ஜோ பைடன் இரங்கல்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 02 Aug 2024 18:37 PM

வயநாடு நிலச்சரிவு : கேராளாவில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்லுகலு உள்ளிட்ட பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில், அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்

இந்நிலையில் வயநாட்டில் நடந்த இந்த கோர சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஜோ பைடன், ஜில்லும் நானும் கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களுக்காக இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களது வேண்டுதல்கள் துணை நிற்கும், தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கும் என்களது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். நிலச்சரிவில் சிக்கியவர்களை துரிதமாக மீட்ட, இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் தைரீயத்தை பாராட்டுகிறோம். இந்த கடினமான நேரத்தில் இந்தியர்களை நாங்கள் நினைவில் கொல்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு கோரம்.. 300-ஐ தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை.. தமிழர்களின் நிலை என்ன?

சோகத்தில் மூழ்கிய கடவுளின் தேசம்

கேரளாவை உலுக்கி இந்த துயர சம்பவம், நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நொடி பொழுதில் நடந்த இந்த விபத்திற்கு 300-க்கும்  மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னமும் கூட தங்களது உறவுகளையும், குடும்ப உறுப்பினர்களையும் கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கேரளாவின் சாலைகளில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வாகங்கள் பாதிக்கப்பட்டவர்களையும், இறந்தவர்களின் உடல்களையும் எடுத்துக்கொண்டு செல்கிறது.

இதையும் படிங்க : Wayanad Landslide : 282 பேர் உயிரிழப்பு.. மக்களை தேடும் மீட்புப்படை.. மனதை உலுக்கும் புகைப்படங்கள்!

கடவுளின் தேசமான கேரளாவில் எங்கு திரும்பினாலும் மரண ஓலங்கள் மட்டுமே கேட்கிறது. இயற்கை செழிப்பும், வளமும் மிக்க கேரளாவில் தற்போது சோக அலை வீசிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஏராளமான மக்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அங்கு மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News