5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : திறப்பு விழாவின் போது சூறையாடப்பட்ட மால்.. ஆஃபரால் ஏற்பட்ட கலவரம்.. அதிர்ச்சி சம்பவம்!

Dream Bazaar | பாகிஸ்தானில் திறப்பு விழா சலுகையை அறிவித்த மால் ஒன்று சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது, அங்கு நடந்தது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : திறப்பு விழாவின் போது சூறையாடப்பட்ட மால்.. ஆஃபரால் ஏற்பட்ட கலவரம்.. அதிர்ச்சி சம்பவம்!
வைரல் வீடியோ
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 02 Sep 2024 13:06 PM

திறப்பு விழாவின் போது சூறையாடப்பட்ட மால் : பொதுவாக ஏதேனும் கடை அல்லது நிறுவனம் புதிதாக திறக்கப்படும்போது சில சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்படும். கடையை விளம்பரப்படுத்தவும், மக்கள் மத்தியில் பொருட்களை கொண்டு சேர்க்கவும் இத்தகைய வியாபார நுணுக்கங்கள் கையாளப்படும். அந்த வகையில் திறப்பு விழா சலுகையை அறிவித்த மால் ஒன்று சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது, அங்கு நடந்தது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திறப்பு நாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு தள்ளுபடிகள்

பாகிஸ்தானின் கராச்சியில் குளிஸ்தன் இ ஜோஹர் என்பவர் புதிய ட்ரீம் பசார் ஒன்றை திறந்துள்ளார். இந்த மாலின் திறப்பு தின சலுகையாக பல்வேறு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகைகள் குறித்து தொலைக்காட்சிகள் மற்றும் பொது வெளிகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடையின் திறப்பு நாளான நேற்று,  கடையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டுள்ளனர். ஒரே நேரத்தில் இவ்வளவு கூட்டம் வந்ததால், கட்டுப்படுத்த முடியாமல் ஊழியர்கள் திணறியுள்ளனர்.

கடையில் இருந்த பொருட்களை சூறையாடிய பொதுமக்கள்

இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்ட பொதுமக்கள் கடைகளில் உள்ள பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் அவற்றை எடுத்து தங்களது கை பைகளில் போட்டுக்கொண்டுள்ளனர். அதுமட்டுமன்றி ஆடைகளை எடுத்து தரையில் போடுவது, கடையின் கண்ணாடி கதவுகள் மற்றும் ஜண்ணல்களை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடைக்குள் புகுந்து சூறையாடிய நிலையில், புதிதாக திறக்கப்பட்ட மால் கலவரம் நடந்த பகுதியை போல காட்சியளிக்கும் வீடியோக்கள் தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது முறையற்ற செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Latest News