5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Technology Impact : இனி வங்கிகளில் கிளர்க் வேலை இல்லாமல் போய்விடும்.. ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

Clerk Position | ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ், கரன்சி மற்றும் நிதி என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நிதித்துறை சந்தித்துவரும் சவால்கள் குறித்து தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அதில் இனி வங்கிகளில் கிளர்க் உள்ளிட்ட நடுத்தர பணிகளுக்கான தேவைகள் விரைவில் இல்லாமல் போகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Technology Impact : இனி வங்கிகளில் கிளர்க் வேலை இல்லாமல் போய்விடும்.. ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 31 Jul 2024 17:01 PM

தொழில்நுட்ப வளர்ச்சி : வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக உலகில் போட்டிகள் அதிகரிக்கக்கூடும். காரணம் மனிதர்களால் செய்யக்கூடிய வேலைகளை இயந்திரங்கள் செய்துவிட்டால், மனிதனால் செய்யக்கூடிய வேலைகள் குறைவாகிவிடும். அவ்வாறு வேலைகள் குறைவானால் போட்டிகள் அதிகரிக்க தொடங்கும். தற்போது அத்தகைய அதிர்ச்சியான தகவலை தான் ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை கூறியுள்ளது. அதாவது இனி வங்கிகளில் கிளர்க் உள்ளிட்ட நடுத்தர பணிகளுக்கான தேவைகள் விரைவில் இல்லாமல் போகலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கை

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ், கரன்சி மற்றும் நிதி என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நிதித்துறை சந்தித்துவரும் சவால்கள் குறித்து தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த திறனுக்கு குறைந்த ஊதியம் அதிக திறனுக்கு அதிக ஊதியம்

அதன்படி, வங்கித் துறையில் அவுட்சோர்சிங் மற்றும் தொலைவில் இருந்து பணியாற்றுவதை டிஜிட்டல் மயமாக்கல் பரவலாக்கி வருகிறது. மூலதனம் மற்றும் பணியாளர் ஊதியத்திற்கு இடையேயான இடைவெளியை தானியங்கி முறை அதிகரிப்பதால், குறைந்த திறனுக்கு குறைந்த ஊதியம், அதிக திறனுக்கு அதிக ஊதியம் என்ற வேலைவாய்ப்பு சந்தை உருவாகிறது. அதே சமயம் அவை, தொழில்நுட்பம் மற்றும் நடுத்தர பணிகளை காணாமல் போக செய்கிறது.

இதையும் படிங்க : Gas Cylinder : கேஸ் சிலிண்டர் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

தொழிநுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்பு

2010 – 2011 ஆம் நிதியாண்டில், தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களின் பங்களிப்பு 50:50 என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால் 2022-23 ஆம் நிதியாண்டில் இதே விகிதம் 74:26 ஆக உள்ளது. இதன் காரணமாக உலக அளவில், வங்கித்துறையில் கீழ்மட்ட பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து, தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது.

ஏஐ சார்ந்த பணியிடங்கள் 16.80 சதவீதமாக உள்ளது

இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறன் உடையவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒட்டுமொத்த பணியமர்த்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்கள் 16.80 சதவீதமாக உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. வரி தாக்கல் முதல் அபராதம் வரை.. முழு விவரம் இதோ!

கலக்கத்தில் பணியாளர்கள்

இதன் காரணமாக வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் கிளர்க் உள்ளிட்ட நடுத்தர பணிகளுக்கான தேவைகள் விரைவில் இல்லாமல் போகலாம் என்று கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை பணியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News