5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

CM MK Stalin: தமிழ்நாட்டில் மீண்டும் போர்டு நிறுவனம் – முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா பயணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நிறுவனங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது வரை பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் மீண்டும் போர்டு நிறுவனம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் பற்றி பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM MK Stalin: தமிழ்நாட்டில் மீண்டும் போர்டு நிறுவனம் – முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்..
முதலமைச்சர் ஸ்டாலின் – போர்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 11 Sep 2024 11:35 AM

தமிழ்நாட்டில் மீண்டும் கால்பதிக்கும் போர்டு நிறுவனம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அந்த வகையில் இன்று போர்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் 30 ஆண்டுகாலம் போர்டு நிறுவனத்துடன் தொடரும் நட்புணர்வை புதுபிக்கும் வகையில் தமிழ்நாட்டில் மீண்டும் போர்டு நிறுவனம் அமைக்கும் சாத்திய கூறுகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அமெரிக்கா சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், சான் பிரான்ஸ்சிஸ்கோவில் அமெரிக்கா முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ” தெற்கு ஆசியாவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு சிறந்த இடமாக இருக்கும். மனித வளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் 48% மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: நடப்பாண்டின் 2வது சந்திர கிரகணம்.. எங்கு, எப்படி பார்க்கலாம்?

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழகத்தில் தான் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு மேம்பட்டு உள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் பல தமிழ்நாட்டில் தங்களது திட்டங்களை தொடங்கியுள்ளனர். 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்த மாநாடு உதவும். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்ய முன் வர வேண்டும்” என பேசியிருந்தார்.

அதனை தொடர்ந்து சிகாகோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அதில் 200 கோடி ரூபாயில் 500 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், Nike உடன் அதன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது மற்றும் சென்னையில் ஒரு தயாரிப்பு உருவாக்கம்/வடிவமைப்பு மையத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுக்கள் நடத்தப்பட்டது.

மேலும், லிங்கன் எலக்ட்ரிக், விஷே நிறுவனம் மற்றும் விஸ்டியன் நிறுவனங்களுடன் ரூ. 850 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளது. இப்படி தமிழ்நாடு நோக்கி முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், சிக்காகோவில் வட அமெரிக்க தமிழ்ச் சங்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

மேலும் படிக்க: ”அதிர்ச்சி.. எனக்கு தெரியாமல் நடந்தது”.. விவாகரத்து குறித்து ஜெயம் ரவி மீது ஆர்த்தி குற்றச்சாட்டு

அப்போது பேசிய அவர், “ அமெரிக்க வாழ் தமிழர்களின் முகங்களை மட்டும் பார்த்து கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது. நான் இன்னும் தமிழ் மண்ணில் தான் இருக்கிறேனோ என்ற எண்ணம் வருகிறது. அறிஞர் அண்ணா அடிக்கடி கூறுவார், அனைவரும் பிறக்க ஒரு தாயின் வயிறு தாங்காது என்பதால் தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்த அன்பு உடன்பிறப்புகள் நாம். இருப்பினும் நாம் எல்லோருக்கும் அன்பையும் பாசத்தை ஊட்டிய தாய் இருக்கிறாள். அவள் தான் தமிழ்த்தாய். தமிழை பல வகையாக அறிஞர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். ஆனால் தமிழை தமிழே என்று அழைப்பதில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை” என பேசினார்.


இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டலைன் போர்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் மீண்டும் போர்டு நிறுவனம் அமைப்பதற்கான சாதியக்கூறுகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “ போர்டு நிறுவனத்துடனான 30 ஆண்டுகால நட்புணர்வை புதுபிக்கும் வகையில், போர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest News