CM MK Stalin: “ முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு சிறந்த இடமாக இருக்கும்” – அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..
சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு நடத்திய நிலையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி, புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சந்திப்பு நடத்துகிறார். அதனை தொடர்ந்து செப்டம்பர் 2 ஆம் தேதி, - சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ பயணம் பயணம் மேற்கொள்கிறார். அங்கு 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதிசிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நடைபெறுகிறது.
அமெரிக்காவில் முதலமைச்சர் ஸ்டாலின்: தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்ற முதலமைச்சருக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று அமெரிக்காவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு நடத்திய நிலையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி, புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சந்திப்பு நடத்துகிறார். அதனை தொடர்ந்து செப்டம்பர் 2 ஆம் தேதி, – சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ பயணம் பயணம் மேற்கொள்கிறார். அங்கு 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதிசிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நடைபெறுகிறது.
இன்று அமெரிக்காவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், ” தெற்கு ஆசியாவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு சிறந்த இடமாக இருக்கும். மனித வளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் 48% மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: இன்று தொடங்கும் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..
இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழகத்தில் தான் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு மேம்பட்டு உள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் பல தமிழ்நாட்டில் தங்களது திட்டங்களை தொடங்கியுள்ளனர். 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்த மாநாடு உதவும். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்ய முன் வர வேண்டும்” என பேசியுள்ளார்.
Starting the day with a brisk walk in San Francisco, gearing up for the Investors Conclave this evening.#morningwalk #morningworkout pic.twitter.com/lzOdl2yki8
— M.K.Stalin (@mkstalin) August 29, 2024
ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்க வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்றைய மாநாட்டில் கலந்துக்கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற ஒரு புகைப்படத்தை தனது எக்ஸ் வலைத்தள பகுதியில் பதிவிட்டிருந்தார். இது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்தது.