5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விசாரணை வளையத்தில் மகாவிஷ்ணு.. சென்னையில் காலடி எடுத்து வைத்தவுடன் கைது செய்த போலீஸ்..

கல்விக்கும் அறிவியலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல், அறிவு சார்ந்த பேச்சு பேசாமல், “முன் ஜென்ம தவறுகளால் தான் தற்போது ஏற்றத் தாழ்வுகளுடன் மாற்றுத்திறனாளியாகவும், வீடில்லாதவராகவும், நோய் நொடிகளுடன் கூடியவராகவும் மனிதனை கடவுள் படைக்கிறார். இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரே மாதிரியாக படைத்திருக்கலாமே?. போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதை பொறுத்து தான் இந்த ஜென்மத்தில் இந்த பிறவி கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

விசாரணை வளையத்தில் மகாவிஷ்ணு.. சென்னையில் காலடி எடுத்து வைத்தவுடன் கைது செய்த போலீஸ்..
மகாவிஷ்ணு
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 07 Sep 2024 19:43 PM

மகாவிஷ்ணு கைது: சென்னைக்கு திரும்பிய மகாவிஷ்ணுவை விசாரணைக்காக காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை அசோக் நகர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அசோக் பில்லர் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பத்மஸ்ரீ மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நேற்று நிகழ்த்தினார். அப்போது கல்விக்கும் அறிவியலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல், அறிவு சார்ந்த பேச்சு பேசாமல், “முன் ஜென்ம தவறுகளால் தான் தற்போது ஏற்றத் தாழ்வுகளுடன் மாற்றுத்திறனாளியாகவும், வீடில்லாதவராகவும், நோய் நொடிகளுடன் கூடியவராகவும் மனிதனை கடவுள் படைக்கிறார். இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரே மாதிரியாக படைத்திருக்கலாமே?. போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதை பொறுத்து தான் இந்த ஜென்மத்தில் இந்த பிறவி கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மகா விஷ்ணு பேசும்போது திடீரென குறுக்கிட்ட ஆசிரியர் ஒருவர் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் முன் ஜென்மம், மறுஜென்மம், கர்மா உள்ளிடவை பற்றி ஏன் பேசுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். இது மிகவும் தவறு என கண்டித்தார். இதனை தொடர்ந்து அந்த ஆசிரியருக்கும் மகாவிஷ்ணுவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக் கூடாது என அந்த ஆசிரியர் திட்டவட்டமாக கூற, அப்படி பேசக்கூடாது என்பதற்கு எங்கு சட்டம் இருக்கிறது என அந்த நபர் மரியாதை குறைவாக அந்த ஆசிரியரை மிரட்டும் வகையில் பேசி கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. அரசு பள்ளியில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்துவதா என பலரும் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், என்னோடு எல்லைக்குள் வந்து எனது துறையில் உள்ள ஒரு ஆசிரியரை அவர் அவமானப்படுத்தி உள்ளார் அவரை சும்மா விடமாட்டேன் ” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நடைபெற்ற நிகழ்வு சார்பாக விசாரணை நடத்தி நடந்தது என்ன என்பது குறித்து, பள்ளிக்கல்வித்துறை தரப்பில் ஆராய்ந்து யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது போன்ற சூழ்நிலையில், மகாவிஷ்ணு தலைமறைவாக இருக்கிறார் என்ற கருத்தி வெளியே பரவத்தொடங்கியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டு, இன்று மதியம் சென்னைக்கு வருவதாக தெரிவித்திருந்தார். இன்று சென்னைக்கு திரும்பிய மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Latest News