5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Powercut: சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் தடை.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ..

சுழற்சி முறையில் நடக்கும் இடங்கள் முடிவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். இந்த நிலையில் சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு பின் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Powercut: சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் தடை.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 29 Aug 2024 07:12 AM

மின்தடை: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சீரான மின்விநியோகம் இருக்க மாதம் ஒருமுறை தமிழ்நாடு அரசு மின்வாரியம் சார்பில் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பது வழக்கம். சுழற்சி முறையில் நடக்கும் இடங்கள் முடிவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு பின் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் இன்று (29.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை  தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.எனவே மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மூத்த குடிமக்களுக்கான FD-க்கு 8.2% வட்டி.. அசத்தும் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

சென்னையில் எங்கே மின்தடை?

தாம்பரம்: குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் தெற்கு,கிருஷ்ணா நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், பாலகிருஷ்ணா நகர், முடிச்சூர் பகுதி சாலை, பழைய பெருங்களத்தூர்,கிருஷ்ணா நகர் 1 முதல் 8வது தெருக்கள், ரமணி நகர், மல்லிகா நகர், ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

கடப்பேரி: மெஸ் சாலை, தாமஸ் தெரு, வடக்கு குளக்கரை, தெற்கு குளக்கரை தெரு, கண்ணன் தெரு, யாதவால் தெரு, எல்லைத் தெரு, ஜிஎஸ்டி சாலை, ரெங்கா தெரு, ஜானகியம்மாள் தெரு, திருவிக நகர் 1வது தெரு, 2வது தெரு, 3வது தெரு ஜெயா தெரு, ராஜகோபால் தெரு, சீனிவாச தெரு, மற்றும் RV கார்டன் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

ஆர்.கே.நகர்: எஸ்.ஏ.கோயில், பெருமாள் கோயில் தோட்டம், ஆரணி ரங்கன் தெரு, திருநாவகர்சுத்தோட்டம், கோதண்டராமர் தெரு, திலகர் நகர், ஆர்.கே.நகர், இளையமுதலி தெரு, வி.ஓ.சி.நகர், மின்ட், கல்மண்டபம், டி.எச்.ரோடு, காமராஜ் காலனி, பசுவையன் தெரு, ஸ்டான்லி ஏரியா, ஸ்டான்லி ஏரியா. தியாகப்பன் தெரு, டோல்கேட் பகுதி கன்னிகோவில் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

ஆவடி:  டிஎன்எச்பி ஆவடி, காமராஜ் நகர், ஆவடி மார்க்கெட், ஜேபி எஸ்டேட், வசந்தம் நகர், பருத்திப்பட்டு, கோவர்த்தன கிரி, அண்ணாமலை நகர் மற்றும் கவுரி நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. .

பெருங்குடி: வடக்கு பகுதியில் அமைந்துள்ள காமராஜ் நகர், வீராசாமி சாலை, சிபிஐ காலனி, ராமப்பா நகர், பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், ராஜலட்சுமி அவென்யூ,டெலிபோன் நகர் ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

Latest News