5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின்.. ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு..!

காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக ஜாமின் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின்.. ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு..!
ஃபெலிக்ஸ் ஜெரால்டு
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 31 Jul 2024 16:52 PM

ரெட் பிக்ஸ் யூடுயூப் சேனலை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமின் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் அவரது யூ டியூப் சேனலை மூட உத்தரவிட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக ஜாமின் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும் படிக்க: 1435 அடி உயரத்தில் ஏறி செல்ஃபி எடுத்த இளைஞர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த மனு நீதிபதி T.V. தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேகநாதன், சர்ச்சைக்குரிய வகையில் இனி பேச மாட்டேன் என இதே போன்ற வழக்கில் ஏற்கனவே ஃபெலிக்ஸ் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும் ஆனால் அதனை மீறி தொடர்ந்து இப்படி பேசி வருவதாக கூறினார்.

ஃபெலிக்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், தனது பேச்சுக்கான விளைவு தற்போது தான் உணர்ந்துள்ளதாகவும் இனி ஒரு போதும் இவ்வாறு பேச மாட்டேன் எனவும் உறுதி அளித்தார்.

மேலும் படிக்க: பிரேக்அப்பால் வாழ்க்கையில் பிரேக் ஏன்..? இதை செய்து வெளியே வாங்க..!

இதனையடுத்து, ஃபெலிக்ஸ்க்கு ஜாமின் வழங்கிய நீதிபதி அவரது யூ டியூப் சேனலை மூட வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் இனி நேர்காணல் அளிக்க மாட்டேன் என விசாரணை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதி நிபந்தனை விதத்துள்ளார்.

Latest News