5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dream Astrology: கனவில் இதெல்லாம் கண்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்!

கனவுகளில் சுப காரியம், விலங்குகள், மனிதர்கள், இயற்கை நிகழ்வுகள், எதிர்மறை சம்பவங்கள் என என்ன நிகழ்ந்தாலும், யார் வந்தாலும் அதற்கான பலன்கள் என்பது உள்ளது. அப்படியான தூக்கத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு கனவுகள் இருக்கும். கனவுகள் நல்ல விதமாக இருக்க வேண்டும் என்று தான் நாம் நினைக்கிறோம். ஆனால் அப்படி இருப்பதில்லை.

Dream Astrology: கனவில் இதெல்லாம் கண்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 26 Aug 2024 16:00 PM

கனவுப்பலன்: நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு செயலுக்கும் என்னென்ன அர்த்தம் என்பதை ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதில் ஒன்று தான் கனவுக்கான பலன்கள். கனவுகளில் சுப காரியம், விலங்குகள், மனிதர்கள், இயற்கை நிகழ்வுகள், எதிர்மறை சம்பவங்கள் என என்ன நிகழ்ந்தாலும், யார் வந்தாலும் அதற்கான பலன்கள் என்பது உள்ளது. அப்படியான தூக்கத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு கனவுகள் இருக்கும். கனவுகள் நல்ல விதமாக இருக்க வேண்டும் என்று தான் நாம் நினைக்கிறோம். ஆனால் அப்படி இருப்பதில்லை. நாம் இந்த தொகுப்பில் கனவில் இந்த விஷயங்களைக் கண்டால் என்ன பலன்கள் என்ன என்பதை காணலாம்.

ஆந்தை: ஆந்தை லட்சுமி தேவியின் வாகனமாக கருதப்படுகிறது. அந்த லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறாள். அத்தகைய சூழ்நிலையில் யாரேனும் கனவில் ஆந்தையைக் கண்டால், அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. லட்சுமி தேவியின்  அருள் கூடுதலாக அவர்களுக்கு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே  கனவில் ஆந்தையை கண்டால்  மிகவும் நல்லது தான். அதனால் கவலையை விடுங்கள்.

பாம்பு: கனவில் பாம்பு கண்டால் அசுபமானது என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது. ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை. பாம்பை பார்ப்பதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒருவரின் கனவில் பாம்பு தென்பட்டால், அது இருக்கும் இடத்தைப் பொறுத்து பலன் கிடைக்கும். ஒருவரின் கனவில் கழுத்தைச் சுற்றி பாம்பு தென்பட்டால் அது பணம் வருவதற்கான அறிகுறியாகவும் கருதப்படுகிறது.

கழுகு: கழுகு உலகையே தாங்கும் விஷ்ணுவின் வாகனமாகக் கருதப்படுகிறது. ஒருவரின் கனவில் கழுகு தோன்றும் போதெல்லாம், விஷ்ணு பகவான் உங்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கனவில் கழுகை தரிசித்தால், விரைவில் வாழ்வில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

தங்கம்: தங்கத்தை கனவில் கண்டால் சில பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. மேலும், கனவில் தங்கத்தை பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது உங்கள் வாழ்க்கையில் லட்சுமி தேவியின் வருகையின் அடையாளமாக கருதப்படுகிறது. கனவில் தங்கத்தை கண்டால், விரைவில் வீட்டில் கனமழை பெய்யும் என்பது நம்பிக்கை.

தீபம்: பொதுவாக வழிபாட்டில் தீபத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. சி ஒருவர் கனவில் ஒளிரும் விளக்கைக் கண்டால், அது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அந்த நபருக்கு விரைவில் நல்ல நாட்கள் வரும் என்பது நம்பிக்கையாகும். மேலும் நீண்ட நாட்களாகத் தொல்லை கொடுத்து வந்த நிதிப் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News