5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vastu Tips: மொட்டை மாடியில் பழைய பொருட்களா? – காத்திருக்கும் ஆபத்து!

Astrology: ஒருபக்கம் நம்முடைய ஜாதக கிரகப்பலன்களால் சில நேரங்களில் சறுக்கல்கள் ஏற்படலாம். இதனை நாம் தவிர்க்க முடியாது. ஆனால் நாம் தெரிந்தே செய்யும் வாஸ்து தவறுகளால் மிகப்பெரிய அளவில் குடும்பத்தில் பிரச்னைகளை சந்திக்கலாம் என கூறப்படுகிறது. வாஸ்துபடி வீட்டில் என்னென்ன, எப்படி இருக்க வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

Vastu Tips: மொட்டை மாடியில் பழைய பொருட்களா? – காத்திருக்கும் ஆபத்து!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 01 Aug 2024 17:16 PM

வாஸ்து டிப்ஸ்: எப்போதும் நம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வ வளம், ஆரோக்கியமான உடல் நலம் என அனைத்தும் இருக்க வேண்டும் என நினைப்போம். ஒருபக்கம் நம்முடைய ஜாதக கிரகப்பலன்களால் சில நேரங்களில் சறுக்கல்கள் ஏற்படலாம். இதனை நாம் தவிர்க்க முடியாது. ஆனால் நாம் தெரிந்தே செய்யும் வாஸ்து தவறுகளால் மிகப்பெரிய அளவில் குடும்பத்தில் பிரச்னைகளை சந்திக்கலாம் என கூறப்படுகிறது. வாஸ்துபடி வீட்டில் என்னென்ன, எப்படி இருக்க வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் நிலையில் நம்மில் பலரும் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை கொண்டு போய் குப்பையில் போடாமல், வீட்டு மொட்டை மாடியில் ஒரு மூலையில் வைத்திருப்போம். அப்படி மொட்டை மாடியில் வாஸ்துபடி என்னென்ன செய்யக்கூடாது என்பது பற்றி பார்க்கலாம்.

Also Read: Aadi Perukku: இந்தாண்டு ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிறு மாற்றலாமா?

நிச்சயமாக நம்மில் பெரும்பாலோர் பயனற்ற மற்றும் உடைந்த பொருட்கள், நாற்காலிகள் மற்றும் மேசைகளை மாடியில் கிடப்பில் போட்டு வைத்திருப்போம். ஆனால் இப்படிச் செய்வது குடும்பத்துக்கு நல்லதே இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உடைந்த பர்னிச்சர் வகைகளை மாடியில் வைத்தால் பணப்பிரச்சனைகள் வருவதோடு, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்க நேரிடும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது.

மேலும் வீடு கட்டும் கம்பங்களும், மூங்கில் கட்டைகளும் தரையில் வீசப்படுகின்றன. வாஸ்து படி வீட்டின் மாடியில் மூங்கில் கூரைகள் இருக்கக்கூடாது. இதனால் வீட்டில் தகராறு ஏற்பட்டு குடும்ப உறுப்பினர்களின் மன அமைதி பறிபோகும் என்று கூறப்படுகிறது. சிலர் வீட்டின் மாடியில் கூரை, மூங்கில் கம்பால் போடப்பட்டு வேய்ந்திருப்பர். அதற்கு பதிலாக வேறு பொருட்களை பயன்படுத்தி கொள்ளவும்.

மொட்டை மாடியில் காணப்படும் பொதுவான பொருட்களில் உடைந்த மட்பாண்டங்களும் ஒன்றாகும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் உடைந்த பானைகளை தரையில் வைக்கக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு செய்தால் வீட்டில் அமைதியின்மை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Also Read: Vastu Tips: சமையலறையில் இந்த பொருட்களை கொட்டினால் குடும்பத்திற்கு ஆபத்து!

தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் துடைப்பம் தரையில் வைக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு செய்தால் நிதி நெருக்கடி ஏற்படும் என்று கூறப்படுகிறது. வீட்டில் பழைய உலோகப் பொருட்கள், கம்பிகள், கருவிகள் போன்றவை மேல் மாடியில் வைக்கப்பட்டுவது வழக்கம். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி இதுவும் நல்லதல்ல. இதுபோன்ற பொருட்களால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மொட்டை மாடியில் தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது வழக்கம். இந்த தொட்டிகளில் எந்த சூழ்நிலையிலும் முள் செடிகளை வளர்க்க கூடாது.  இதனால் உடல் நலக்குறைவு மட்டுமின்றி வீட்டில் அமைதியின்மை ஏற்படும் என கூறப்படுகிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News