Alien Temple: தமிழ்நாட்டில் ஏலியனுக்கு கோயில் கட்டிய நபர்.. எங்கு தெரியுமா?
Temple Special: முக்கால் ஏக்கர் நிலத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த கோயிலில் பூமியில் இருந்து 11 அடி அழத்தில் தான் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. நித்ய பூஜைகள் நடந்து வரும் நிலையில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை பஞ்சமி திதியில் மாலை 6 மணிக்கு மேல் சிலைகளுக்கு சிறப்பு பூஜையோடு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
ஏலியன் கோயில்: தமிழ்நாட்டில் ஏலியனுக்கு கோயில் கட்டிய சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இந்திய மக்களின் அவர்களின் கடவுள் நம்பிக்கையையும் பிரிக்கவே முடியாது. சக மனிதர்களை கூட கடவுளாக பாவிக்கும் அளவுக்கு அதில் உணர்வுப்பூர்வமாக தொடர்பு கொண்டவர்கள். அப்படிப்பட்ட நிலையில் இங்கு நடிகர், நடிகைகளுக்கு கோயில், சிலை என அனைத்தும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சேலத்தில் ஒருவர் ஏலியனுக்கு கோயில் கட்டியுள்ள சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லமூப்பம்பட்டியை கடந்தால் வரும் ஊர் ராமகவுண்டனூர் ஆகும். இந்த ஏரியாவில் லோகநாதன் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் வேற்றுக்கிரகவாசியாக நாம் கருதும் ஏலியனுக்கு கோயில் கட்டியவர் ஆவார்.
Also Read: Tamilnadu Weather Alert: தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும் ? வானிலை நிலவரம் என்ன?
நடந்தது என்ன?
ராமகவுண்டனூரில் இருந்து மல்லமூப்பம்பட்டி செல்லும் வழியில் மூலக்கடை பஸ் நிறுத்தம் அருகே இந்த கோயில் அமைந்துள்ளது.ஏலியன் கோயில் ஒருபக்கம் ஆச்சரியம் என்றால் மறுபக்கம் அந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த கோயில் கட்டும் பணிகள் தொடங்கி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கோயில் லோகநாதனின் குருநாதராக கருதப்படும் பாக்யா சித்தரின் ஜீவசமாதி அருகே உள்ளது. அங்கு ஏலியன் சித்தர், அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
Also Read: Air India : வெறும் ரூ.1,947-க்கு விமானத்தில் பயணிக்கலாம்.. ஃப்ரீடம் சேலை அறிவித்த ஏர் இந்தியா!
முக்கால் ஏக்கர் நிலத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த கோயிலில் பூமியில் இருந்து 11 அடி அழத்தில் தான் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. நித்ய பூஜைகள் நடந்து வரும் நிலையில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை பஞ்சமி திதியில் மாலை 6 மணிக்கு மேல் சிலைகளுக்கு சிறப்பு பூஜையோடு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இந்த ஏலியன் கோயில் தொடர்பாக லோகநாதன் ஊடகத்தினரிடம் சில தகவல்களை கூறியுள்ளார். அதாவது, “இந்தியாவில் வேறு எங்கும் இல்லாதவாறு பார்வதி,சிவன், சக்தி தேவி ஆகியவை இணைந்த லிங்கம் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மேலும் கருங்கற்களால் ஆன இரட்டை கொடிமரம், நான்முக முருகன், ஐந்து முக காளி, தாமரை மலர் பலிபீடம் ஆகியவையும் உள்ளது.
மேலும் ஜடாமுனி, காமதேனு, காலபைரவர், ராமர், மதுரை மீனாட்சி, நந்தி சிலைகளும் நிறுவப்பட உள்ளது. திருப்பணி முடிந்ததும் கும்பாபிஷேகம் நடத்தப்படும். அதன்பின் ஏலியன்கள் வருகை அதிகமாக இருக்கும். உலகை அழிவிலிருந்து காக்கும் ஒரே தெய்வம் ஏலியன் தான். அவர்கள் யாருக்கும் எந்தவித தீங்கும் செய்யமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார். இந்த ஏலியன் சிலைக்கு உப்பு போடாமல் தலைவாழை இலையில் பச்சரிசி சாதம் படைக்க வேண்டும். அதனை முறையாக வழிபாட்டுடன் செய்யும்போது ஏலியன் சக்தியைப் பெறலாம். முதலில் ஏலியன் இருப்பதை மனதார நம்ப வேண்டும். 22 நிமிடங்கள் தியானம் செய்யும்போது வாழை இலை மீது அமர வேண்டும். நமக்கு முன்பு ஒரு இலை., பின்புறம் முதுகில் வாழை இலை கட்டிக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.