Gold Cleaning Hacks: வீட்டில் தங்க நகைகளை எளிதாக சுத்தம் செய்வது எப்படி? இங்கே சில எளிய குறிப்புகள்!
Home Tips: திருமணம் முதல் மற்ற சுப காரியங்கள் வரை அனைத்திற்கு தங்க நகைகள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்க மக்கள் அச்சப்படுகின்றனர். வாங்கும்போது பளபளப்பாக இருக்கும் தங்கம், அதன்பின் அதன் தன்மையை இழக்க தொடங்குகிறது. தங்கத்தை பாலீஷ் செய்ய கடைக்கு கொண்டு சென்றால், எங்கே ஏமாற்றி விடுவார்களோ என்ற பயமும் ஏற்படுகிறது. வேறு எங்கு கொண்டு செல்லவும் அச்சமாக உள்ளது. இப்படியான சூழ்நிலையில், வீட்டில் இருந்தபடியே தங்கத்தை எப்படி சுத்தம் செய்து, பளபளப்பாக வைக்கலாம் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
தங்க நகைகள் சுத்தம் செய்யும் முறை: தங்க நகைகள் பெண்களுக்கு உயிர் என்றே சொல்லலாம். தங்க நகைகள் வாங்குவது பலரும் பெரும் கனவு. திருமணம் முதல் மற்ற சுப காரியங்கள் வரை அனைத்திற்கு தங்க நகைகள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்க மக்கள் அச்சப்படுகின்றனர். வாங்கும்போது பளபளப்பாக இருக்கும் தங்கம், அதன்பின் அதன் தன்மையை இழக்க தொடங்குகிறது. தங்கத்தை பாலீஷ் செய்ய கடைக்கு கொண்டு சென்றால், எங்கே ஏமாற்றி விடுவார்களோ என்ற பயமும் ஏற்படுகிறது. வேறு எங்கு கொண்டு செல்லவும் அச்சமாக உள்ளது. இப்படியான சூழ்நிலையில், வீட்டில் இருந்தபடியே தங்கத்தை எப்படி சுத்தம் செய்து, பளபளப்பாக வைக்கலாம் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Kitchen Tips: சமையலறை கத்தியில் துருவா..? கவலை வேண்டாம்! இப்படி க்ளீன் பண்ணுங்க!
பேஸ்ட்:
வீட்டில் நாம் அன்றாட பயன்படுத்தும் பேஸ்ட்டையும் தங்க நகைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இதில் உள்ள ஃவுளூரைடு கறைகளை சுத்தம் செய்து மீண்டும் பிரகாசத்தை தரும். நாம் பயன்படுத்தும் பேஸ்ட்டில் சிறிது எடுத்து நகைகளில் தேய்க்கவும். தேய்த்த பிறகு, தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யவும். அதன் பிறகு பருத்தி துணியால் துடைக்கவும். இப்படி செய்வதன்மூலம், அவற்றில் உள்ள தூசி, அழுக்குகள் மறைந்து பளபளக்கும்.
சோப்பு நீர்:
சோப்பு நீர் மூலம் தங்கத்தை எளிதாக சுத்தம் செய்வது மட்டுமின்றி, பிரகாசிக்கவும் வைக்கலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் பாதி வெந்நீரை எடுத்து அதில் சோப்பு நீர் கலந்து கொள்ளுங்கள். இதில் தங்க நகைகளை போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும். அதன்பின், பல் துலக்கும் பிரஷ் அழுத்தி தேய்க்க வேண்டும். தொடர்ந்து காட்டன் துணியை எடுத்து அனைத்து கறைகளும் போகும் வரை அழுத்தி தேய்த்தால், தங்க நகைகள் மீண்டும் புதியது போல் ஜொலிக்கும்.
சுடு தண்ணீர்:
சுடு தண்ணீரில் மூழ்கும் வரை 10 நிமிடங்கள் தங்கத்தை போடவும். அதன் பிறகு, பல் துலக்கும் பிரஷ் கொண்டு அழுக்குகள் போகும் வரை தேய்க்கவும். தேய்த்தபின், பருத்தி துணியால் சுத்தம் செய்தால், புதியது போல் ஜொலிக்கும்.
ALSO READ: Home Tips: மெத்தை கறை சட்டுனு போகணுமா? எப்போதுமே புதுசு மாதிரி பளபளக்க இதை ட்ரை பண்ணுங்க!
கற்கள் இருந்தால் மிகவும் கவனம்:
உங்கள் தங்க நகையில் கற்கள், முத்துக்கள், பவளம், மரகதம், மாணிக்கம் போன்றவை இருந்தால் மிகவும் கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். தலையில் பயன்படுத்தும் ஷாம்பு கொண்டு அவற்றை சுத்தம் செய்யவும். இது அவற்றின் நிறம் மாறாமல் தடுக்கும்.
பேக்கிங் சோடா:
நகைகளை மட்டும் சுத்தம் செய்ய பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடாவைச் சேர்த்து, நகைகளை சுத்தம் செய்து, துணியால் துடைத்தால் புதியது போல் தோன்றும்.