5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Accident: பள்ளி வாகனம் மீது மோதிய அரசு பேருந்து.. 2 மாணவர்கள் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் செயல்படும் லயோலா பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை வழக்கம்போல  பள்ளி வாகனம் ஏற்றி சென்றுள்ளது. கப்பல் என்ற இடத்தில் வந்தபோது அதே சாலையில் எதிர் திசையில் கர்நாடகா அரசின் மாநில பேருந்து அதிவேகமாக வந்ததாக சொல்லப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பேருந்து பள்ளி வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

Accident: பள்ளி வாகனம் மீது மோதிய அரசு பேருந்து.. 2 மாணவர்கள் உயிரிழப்பு
பள்ளி வாகனம் மீது மோதிய பேருந்து மோதிய காட்சி
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 05 Sep 2024 16:40 PM

கர்நாடகாவில் பள்ளி வாகனம் மீது அரசு போக்குவரத்து கழக பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் செயல்படும் லயோலா பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை வழக்கம்போல  பள்ளி வாகனம் ஏற்றி சென்றுள்ளது. கப்பல் என்ற இடத்தில் வந்தபோது அதே சாலையில் எதிர் திசையில் கர்நாடகா அரசின் மாநில பேருந்து அதிவேகமாக வந்ததாக சொல்லப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பேருந்து பள்ளி வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் இருந்த மக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Whiskey Health Benefits: விஸ்கி குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா..? குறைந்த அளவில் எடுப்பது மிக முக்கியம்!

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மான்வி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக  சம்பவ இடத்திற்கு வந்த மான்வி போலீசார் உள்ளூர் மக்கள் உதவியுடன் அனைவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து  அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர் மீது மான்வி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரிடம் நடத்தப்பட முதற்கட்ட விசாரணையில் சாலையில் இருந்த பள்ளத்தை தவிர்க்கும் பொருட்டு பேருந்தை ஓட்டுநர் வலது பக்கமாக திருப்பியதால் பள்ளி வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது தெரிய வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 மாணவர்கள் காயம் அடைந்தனர். அதேசமயம்  இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  காயமடைந்தவர்களில் நான்கு பேருக்கு கால் துண்டாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Also Read: Crime: பச்சிளம் குழந்தைக்கு விஷப்பால் ஊற்றி கொன்ற தம்பதி.. பிறந்த 9 நாட்களில் கொடூரம்.. அதிர்ச்சி காரணம்!

கடந்த மாதம் நடந்த பெரும் விபத்து

முன்னதாக கடந்த மாதம் பெங்களூருவில் ஹெப்பல் மேம்பாலம் அருகே வால்வோ பேருந்து ஒன்று கடந்த மாதம் விபத்துக்குள்ளானது. அந்த பேருந்தின் ஓட்டுநர் செய்த சம்பவம் ஒன்றால் பல வாகனங்களும், அதன் உரிமையாளர்களும் காயமடைந்தனர்.  பேருந்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் ஓட்டுநர் ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டு வண்டி ஓட்டுகிறார். தொடர்ந்து அந்த சாலையில் முன்னால் நிற்கும் வாகனத்தை நெருங்கும் போது பிரேக் செய்ய முயன்றார். அப்போது பிரேக் செயலிழந்து முன்னால் நின்ற நான்கு கார்கள் மற்றும் ஐந்து இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Latest News