5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Indian 2: “தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமையேற்க கூடாது” சூசகமாக பேசும் கமல்!

Kamalhasan: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவை ஆள ஏன் தமிழர்கள் வரக்கூடாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Indian 2: “தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமையேற்க கூடாது” சூசகமாக பேசும் கமல்!
கமல்ஹாசன்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 02 Jun 2024 15:51 PM

கமலஹாசன் – ஷங்கர் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தியன் திரைப்படத்தில் இந்தியாவிலே லஞ்சம் அதிக அளவில் இருப்பதை தத்ருபமாக எடுத்துக்காட்டினர். இந்தியாவிலே லஞ்சம் அதிக அளவில் இருப்பதை வெளிப்படையாக காட்டியிருந்தார் இயக்குநர் ஷங்கர். மேலும் இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த கமல்ஹாசன், இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தில்  வாழ்ந்திருந்தார் என்றே கூறலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இவர்களுடன் நாசர், சுகன்யா, கவுண்டமணி, மனோரமா, செந்தில் போன்ற ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர்.

பல வருடங்களாக இந்தியன் 2 திரைப்படம் எடுக்க முயற்சிகள் நடைபெற்ற வந்த நிலையில், 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி இப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தியன் 2  திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின்  3 பாகம் வெளியாவதாக  படக்குழு அறிவித்துள்ளது.

Also Read: “295 இடங்கள்” கருத்துக்கணிப்பு குறித்து கேள்வி.. ராகுல் காந்தி அளித்த நறுக் பதில்!

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா,காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், பிரியா பவானி சங்கர் என்று பல நட்சத்திர பட்டாளங்கள் இந்நியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த “பாரா பாரா” என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அடுத்து “நீலோற்பம்” உட்பட அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, இந்தியன் 2 திரைப்படம் சிக்கலில் மாட்டி தவித்த போது அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தோம். அப்போது அமைச்சர் உதயநிதி இந்த திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு எங்களுக்கு உதவி செய்தார். அதே போல், நாங்களும் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய கமல்ஹாசன் நான் தமிழன், அதே நேரத்தில் நான் இந்தியன். இங்கு பிரிச்சி விளையாடனும்னு யாராவது நினைச்சா அது இந்தியாவால் நடக்காது. நாம் எப்போதும் வந்தாரை வாழவைப்போம். தமிழனுக்கு எப்போது அமைதி காக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும். தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்க கூடாது என்பதே என் எண்ணம் என்று கமல்ஹாசன் கூறினார். இதையும் செய்து காட்டுவோம் எண்ணை போன்ற பகுத்தறிவுவாதிகளுக்கு கடவுள் இல்லாமல் இருக்கலாம் ஆனால், மனிதர்கள் இல்லாமல் இருக்கவே முடியாது என்று இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கூறினார்.

Also Read: ”என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்” 3 நாள் தியானம் குறித்து மோடி உருக்கம்!

 

Latest News