5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadhaar Card : ஆதார் கார்டில் முகவரியை மாற்ற இந்த 45 ஆவணங்களை பயன்படுத்தலாம்.. எவையெல்லாம் தெரியுமா?

Address Update | ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை மாற்ற வேண்டும் என்றால் இந்த 45 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சுலபமாக முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.

Aadhaar Card : ஆதார் கார்டில் முகவரியை மாற்ற இந்த 45 ஆவணங்களை பயன்படுத்தலாம்.. எவையெல்லாம் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 30 Sep 2024 17:21 PM

ஆதார் அப்டேட் : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமனக்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது, மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் பல காரியங்களை செய்யவே முடியாத நிலை உள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ள நிலையில், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை மாற்ற வேண்டும் என்றால் இந்த 45 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சுலபமாக முகவரியை மாற்றிக்கொள்ளலாம். அவை எந்த எந்த ஆவணங்கள் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

இதையும் படிங்க : New Rules : கேஸ் சிலிண்டர் விலை முதல் ஆதார் கார்டு வரை.. அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள்!

இணையத்தில் ஆதார் முகவரியை அப்டேட் செய்வது எப்படி?

  1. முதலில் UIDAI-ன் My Aadhaar இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. பிறகு ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்து, Send OTP என்பதை கிளிக் செய்யவும்.
  3. பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்துள்ள OTP-யை பதிவு செய்து Log In என்பதை கிளிக் செய்யவும்.
  4. அதன் பின் இணையத்தில் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதற்கு கீழே Address Update என்பதை கிளிக் செய்து, பிறகு Update Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  5. அப்போது புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் உள்ள தகவல்களை சரிபார்த்துவிட்டு பிறகு Process to Update Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  6. இதற்கு பிறகு தற்போதைய முகவரி திரையில் தோன்றும். பின்னர் நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் விவரங்களை அதன் கீழ் தோன்றும் Details to be updated என்ற பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.
  7. முகவரியை முழுவதுமாக பதிவேற்றிய பிறகு, முகவரிக்கான ஆதாரமாக மின் கட்டண ரசீதை அப்டேட் செய்ய வேண்டும்.
  8. இதற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் கார்டில் வீட்டு முகவரியை மாற்ற ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள்

  • பாஸ்போர்ட்
  • பாஸ்புக்
  • தபால் நிலைய பாஸ்புக்
  • ரேஷன் கார்டு
  • வாக்காளர் அடையாள அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • அரசாங்கம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
  • கடைசி மூன்று மாதங்களுக்கான மின்சார கட்டண பில்
  • கடைசி மூன்று மாதங்களுக்கான குடிநீர் கட்டண பில்
  • கடைசி மூன்று மாதங்களுக்கான லேண்ட்லைன் கட்டண பில்
  • ஒரு வருடத்திற்கான சொத்துவரி ரசீது
  • கடைசி மூன்று மாதங்களுக்கான கிரெடிட் கார்டு அறிக்கை
  • காப்பீட்டு திட்டம்
  • புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் கூடிய வங்கிக் கடிதம்
  • புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் கூடிய பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கடிதம்
  • புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் கூடிய கல்வி நிறுவன கடிதம்
  • NREGA ஜாப் கார்டு
  • ஓய்வூதிய அட்டை
  • விவசாயிகளுக்கான கிசான் பாஸ்புக்
  • CGHS மற்றும் ECHS கார்டு
  • எம்.பி, எம்.எல்.ஏ அதிகாரி அல்லது தாசில்தாரின் முகவரி சான்றிதழ்
  • கிராம பஞ்சாயத்து பிரமுகரின் முகவரி சான்றிதழ்
  • வருமான வரி மதிப்பீட்டு ஆணை
  • வாகனப் பதிவுச் சான்றிதழ்
  • விற்பனை அல்லது வாடகை ஒப்பந்தம்
  • அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய முகவரி அட்டை
  • புகைப்படத்துடன் கூடிய சாதி மற்றும் இருப்பிடச் சான்று
  • ஊனமுற்றோர் அடையாள அட்டை
  • கேஸ் இணைப்பு பில்
  • மனைவியின் பாஸ்போர்ட்
  • சிறுவர்களுக்கு பெற்றோரின் பாஸ்போர்ட்
  • முகவரியுடன் கூடிய திருமணச் சான்று
  • மாற்று சான்றிதழ்
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் அடையாளச் சான்றிதழ்
  • EPFO அடையாள அட்டை

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. 7.25 வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

மேற்குறிப்பிட்ட இந்த சான்றிதழ்களை பயன்படுத்தி நீங்கள் ஆதார் கார்டில் உங்கள் முகவரியை திருத்தம் அல்லது மாற்றிக்கொள்ளலாம்.

Latest News