5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bank Holiday September 2024: செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு போறீங்களா? இத்தனை நாட்கள் விடுமுறை.. நோட் பண்ணிக்கோங்க!

செப்டம்பர் வங்கி விடுமுறை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட 2024 வங்கி விடுமுறை காலண்டரின்படி, இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் செப்டம்பர் மாத்ததில் 15 நாட்கள் விடுமுறைகளைக் கடைப்பிடிக்கும்.  சில விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதியில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது.

Bank Holiday September 2024: செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு போறீங்களா?  இத்தனை நாட்கள் விடுமுறை.. நோட் பண்ணிக்கோங்க!
வங்கிகள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 26 Aug 2024 11:45 AM

வங்கி விடுமுறை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட 2024 வங்கி விடுமுறை காலண்டரின்படி, இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் செப்டம்பர் மாத்ததில் 15 நாட்கள் விடுமுறைகளைக் கடைப்பிடிக்கும்.  சில விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதியில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும் பு விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகைக்கு குறிப்பிட்ட மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். உதாரணமாக ஓணம் பட்டிகைக்கு கேரளா மாநிலத்தில் தான் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதே நாளில் மற்ற மாநிலங்களில் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். எனவே, வரும் செப்டம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

15 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் கீழேயுள்ள முழு வங்கி விடுமுறைப் பட்டியலைச் சரிபார்த்த பின்னர் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிப் பணிகளை செப்டம்பர் மாதத்தில் எந்தத் தேதியில் முடிக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம். இந்தப் பட்டியல் மத்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது.

Also Read: ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டுமா? UIDAI கூறுவது என்ன?

செப்டம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள்:

  • செப்டம்பர் 1: ஞாயிற்றுகிழமை
  • செப்டம்பர் 4: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திருபாவ திதி (கௌஹாத்தி வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)
  • செப்டம்பர் 7: விநாயகர் சதுர்த்தி (அனைத்து மாநில வங்கிளுக்கும் விடுமுறை)
  • செப்டம்பர் 8: ஞாயிற்றுகிழமை
    செப்டம்பர் 14: இரண்டாது சனிக்கிழமை, ஓணம் (கேரள மாநில வங்கிகளுக்கு விடுமுறை)
  • செப்டம்பர் 15: ஞாயிற்றுகிழமை
    செப்டம்பர் 16: Barawafaat ( அனைத்து மாநில வங்கிளுக்கும் விடுமுறை)
  • செப்டம்பர் 17: Milad-un-Nabi (காங்டாக் மற்றும் ராய்ப்பூர் வங்கிகளுக்கு விடுமுறை)
  • செப்டம்பர் 20: Eid-e-Milad-ul-Nabi (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வங்கிகளுக்கு விடுமுறை)
  • செப்டம்பர் 22: ஞாயிற்றுகிழமை
  • செப்டம்பர் 21: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் (கொச்சி மற்றும் திருவனந்தபுரம் வங்கிகளுக்கு விடுமுறை)
  • செப்டம்பர் 23: மகாராஜா ஹரிசிங் ஜி பிறந்தநாள் (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வங்கிகளுக்கு விடுமுறை)
  • செப்டம்பர் 28: நான்காவது சனிக்கிழமை
  • செப்டம்பர் 29: ஞாயிற்றுகிழமை

Also Read: ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் ரூ.70,000 வரை வருமானம்.. SBI-ன் அசத்தல் அறிவிப்பு!

இந்த குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், ஏடிஎம்கள், மொபைல் பயன்பாடுகள் மற்றும் வங்கி இணையதளங்கள் வழியாக தங்களது வங்கிச் சேவைகளை அணுக முடியும். இருப்பினும், வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றாவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Latest News