Viral Video: இந்தியா வந்ததால் தலைகீழாக மாறிய அமெரிக்க நபரின் வாழ்க்கை!
Instagram Viral: இந்தியா பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு. இங்கு பல்வேறு வகையான மதங்கள் இனங்கள் மொழிகள் உணவு வகைகள் ஆடைகள் கலாச்சாரங்கள் பழக்கவழக்கங்கள் என எங்கு சென்றாலும் இந்தியாவில் இருப்பவர்களும் சரி வெளிநாட்டில் இருந்து வருபவர்களும் சொல்லி கற்றுக் கொள்வதற்கு என ஏராளமான விஷயங்கள் உள்ளது. மேலும் ஆண்டு தோறும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தருகிறார்கள்.
வைரல் வீடியோ: அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதில் நான் இந்தியாவுக்கு சென்று வந்ததால் வாழ்க்கையில் ஏற்றப்பட்ட மாற்றங்கள் என 8 விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். இந்தியா பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு. இங்கு பல்வேறு வகையான மதங்கள் இனங்கள் மொழிகள் உணவு வகைகள் ஆடைகள் கலாச்சாரங்கள் பழக்கவழக்கங்கள் என எங்கு சென்றாலும் இந்தியாவில் இருப்பவர்களும் சரி வெளிநாட்டில் இருந்து வருபவர்களும் சொல்லி கற்றுக் கொள்வதற்கு என ஏராளமான விஷயங்கள் உள்ளது. மேலும் ஆண்டு தோறும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்து இங்கு இருக்கும் வரலாறு முதல் தற்போது இருக்கும் சூழல் வரை அனைத்தையும் வியந்து பார்க்கும் அளவுக்கு நமது இந்தியா தகுதி வாய்ந்தது.
Also Read: Viral Video: வெடித்து சிதறிய பட்டாசுகள்.. பதறி ஓடிய மக்கள்.. வைரலாகும் வீடியோ!
View this post on Instagram
இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த டிம் பிஷ்ஷர் என்ற நபர் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளார். அப்படி வந்த இடத்தில் தான் அனுபவித்த கலாச்சாரம் மாற்றங்களை ஆவணப்படுத்தி வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். இதனை வேறொரு நாட்டிற்குச் செல்வது நிறைய மாற்றங்களும் வருகிறது. அமெரிக்காவிலிந்து இந்தியாவுக்கு வந்த பிறகு என் வாழ்க்கை மாறிய 8 வழிகள் இதோ என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
Also Read: Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்.. உளுந்த வடை, பருப்பு வடை செய்வது எப்படி..?
மாற்றம் கண்ட விஷயங்கள்
- முதலாவதாக உணவில் அதிக சுவை மற்றும் மசாலாக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவு வகைகள் கிடைக்கும். சாதாரண காய்கறிகள் தொடங்கி இறைச்சிகள் வரை ஒரே பெயர்களில் இருந்தாலும் வெவ்வேறு சுவைகளில் நாம் ரசிக்கலாம். அதனால்தான் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வரும்போது பிரத்யேகமாக உணவு பட்டியலுடன் வருகிறார்கள்.
- இரண்டாவதாக தனது வீட்டு பால்கனியில் பூந்தொட்டிகளை வைத்து அழகுப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் எனக்கு புல் வெட்டும் வேலை இல்லை என கூறியுள்ளார். வெளிநாடுகளில் வீடுகளில் பூச்செடிகள் வளர்ப்பதில்லை.
- மூன்றாவதாக என்னுடைய பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுவதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை ஒருவரை பெயர் வைத்து அழைப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. காரணம் ஒருமுறை பழகியவுடன் பந்தம் ஏற்பட்டது போல உணர்வு இருக்கும். அதனால் சார், அண்ணன்,தம்பி, அக்கா, மாமா, மச்சான் என ஒரு உறவு முறையை சொல்லி அழைப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிஷ்ஷரை சார், பையா, அங்கிள் என அழைத்துள்ளார்கள்.
- ஒரு புதிய மொழியை படிக்கவும் பேசவும் முடிகிறது. இந்த வீடியோவில் அவர் ஹிந்தி மொழி புத்தகத்தை படிப்பது போன்று காட்டுகிறார்.
- ஐந்தாவதாக என்னுடைய கார் பார்க்கிங் கதவு தானாக திறக்கப்படுவதில்லை. இந்தியாவை பொறுத்தவரை ஆட்டோமேட்டிக் விஷயங்கள் என்பது வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டுமே உள்ளது. அந்த வகையில் அவர் வீட்டு கார் ஷெட் கதவை அவரே திறந்து மூடுகிறார்.
- அதேபோல் இந்தியாவில் நான் வலது பக்கம் அமர்ந்து கார் ஓட்டுகிறேன். இதுவே வெளிநாட்டில் இடது பக்கம் அமர்ந்து கார் ஓட்டும் சூழல் உண்டாகும்.
- இந்தியாவில் இடது பக்கம் செல்ல வேண்டும் என்பது சாலை விதியாகும். அதுவே வெளிநாடுகளில் வலது பக்கம் செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
- தனது இரு மகள்களையும் சைக்கிளில் வைத்து குறுகிய இடத்துக்கு சென்று வர முடிகிறது என டிம் பிஷ்ஷர் கூறியுள்ளார்.
கமெண்டுகளை வீசிய நெட்டிசன்கள்
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்களில் ஒருவர் விரைவில் ஆதார் கார்டு எடுங்கள் என தெரிவித்துள்ளார். இன்னொருவர், சைக்கிளில் அதிகமான குழந்தைகளை அமர்த்துவது ஒரு நல்ல கலாச்சார மாற்றம் மற்றும் அதே நேரத்தில் குறுகிய தூரத்தை கடப்பது வேடிக்கையான ஒன்று என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.