5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Donald Trump : டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு.. வெளிநாடுகளின் தலையிடல் இல்லை.. FBI திட்டவட்டம்!

Gun Attack | அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி பென்சில்வேனியா பகுதியில் தேர்தல் பரப்புரையில் டிரம்ப் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

Donald Trump : டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு.. வெளிநாடுகளின் தலையிடல் இல்லை.. FBI திட்டவட்டம்!
டொனால்ட் டிரம்ப்
vinalin
Vinalin Sweety | Published: 29 Aug 2024 18:44 PM

எஃப்பிஐ விசாரணை அறிக்கை : பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான சம்பவத்தில் வெளிநாடுகளின் சதி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து FBI விசாரணை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வெளிநாடுகளின் சதி, தொடர்பு எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது. டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தமஸ் க்ரூக்ஸ் தனித்தே இயங்கியுள்ளார் என்றும் FBI தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : கேரள சினிமாவை போல தமிழ் சினிமாவில் எந்த பாலியல் புகாரும் வரவில்லை.. அமைச்சர் சாமிநாதன் திட்டவட்டம்!

டொனால்ட் டிரம்பு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி பென்சில்வேனியா பகுதியில் தேர்தல் பரப்புரையில் டிரம்ப் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.  துப்பாக்கி சூட்டிற்கு பின் டிரம்ப் மக்களிடம் கைகளை உயர்த்தி காட்டினார். துப்பாக்கிச் சூடு பட்டதும் டிரம்ப் கீழே குனிந்து தன்னை தற்காத்துக் கொண்டார். உடனடியாக பாதுகாவலர்கள் அங்கு விரைந்து டிரம்பை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து ரத்தம் வடிய வடிய அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் டிரம்பின் காதுகள் காயமடைந்த நிலையில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. அவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் டிரம்ப் சுடப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்து வந்தது. டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வெளிநாடுகளின் சதி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், FBI அதனை முற்றிலுமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Seeman : சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு.. ஏன் தெரியுமா?

துப்பாக்கிச் சூடு குறித்து ஊடகத்திடம் பேசிய டிரம்ப்

Latest News