5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

South Korea: அதிகாரிகள் அலட்சியம்.. 1000 பேர் உயிரிழப்பு.. 30 பேரை தூக்கில் ஏற்றிய கிம் ஜோங் உன்!

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1000 பொதுமக்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான தகவலின்படி, அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிகழ்ந்த உயிர் இழப்புகளுக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 20 முதல் 30 பணியாளர்கள் கடந்த மாத இறுதியில் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

South Korea: அதிகாரிகள் அலட்சியம்.. 1000 பேர் உயிரிழப்பு.. 30 பேரை தூக்கில் ஏற்றிய கிம் ஜோங் உன்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 04 Sep 2024 22:45 PM

கிம் ஜோங் உன்: வடகொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தடுக்கத் தவறியதாக 30 அதிகாரிகளை அதிபர் கிம் ஜோங் உன் தூக்கிலிட உத்தரவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1000 பொதுமக்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான தகவலின்படி, அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிகழ்ந்த உயிர் இழப்புகளுக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 20 முதல் 30 பணியாளர்கள் கடந்த மாத இறுதியில் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Special Buses: உடனே டிக்கெட் போடுங்க.. விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

தூக்கிலிடப்பட்ட அதிகாரிகளின் யார் யார் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், சாகாங் மாகாணக் கட்சிக் குழுவின் செயலாளரான கங் போங் உன்னும் ஒருவர் என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் வட கொரியாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சுமார் 4,000 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கிட்டதட்ட 15 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை அதிபர் கிம் ஜாங் அன் நேரடியாக பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை மீண்டும் ஏற்படுத்தி கொடுத்து அவர்களின் இழந்த வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க பல மாதங்கள் ஆகும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15,400 பேருக்கு பியோங்யாங்கில் அரசாங்கம் தங்குமிடம் வழங்கியது.

Also Read: The Greatest Of All Time‌: “ஒரே ஒரு நாள் மட்டும்” – விஜய்யின் கோட் பட சிறப்பு காட்சிக்கு அனுமதி!

இதற்கிடையில், இந்த இயற்கை பாதிப்பால் சுமார் 1000 பேர் இறந்தனர் என்ற தகவலை வட கொரிய அதிபர் திட்டவட்டமாக மறுத்தார். தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். சர்வதேச அளவில் வட கொரியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக பரப்பப்பட்ட வதந்தி என அவர் குற்றம் சாட்டினார்.

இப்படியான நிலையில் கொரொனா தொற்றுநோய்க்குப் பிறகு வட கொரியாவில் மரணதண்டனைகள் ஆச்சரியமூட்டும் வகையில்அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனாவுக்கு முன்னால் தென்கொரியாவில் பொதுவாக ஆண்டுக்கு 10 மரணதண்டனைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. கொரோனாவுக்குப் பின் ஆண்டுதோறும் 100 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Latest News