5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Srilanka: 24 மணி நேரத்தில் விசா.. இனி இலங்கைக்கு ஈஸியா செல்லலாம்!

தீவு நாடான இலங்கை மிகச்சிறந்த ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் ஆண்டுதோறும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இப்படியான நிலையில் இலங்கை நாட்டிற்கு வருவதற்கான விசா வழங்கும் பணியை வி.எஃப்.எஸ். நிறுவனம் மேற்கொண்டு வந்தது. ஆனால் அந்நிறுவன நடவடிக்கையால் வெளிநாட்டினர் மிகப்பெரிய அளவில் சிரமப்பட்டதாக தகவல் வெளியானது. அதேசமயம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தால் தொழில்நுட்ப முறைகள் மாற்றப்பட்டதால் சிக்கல் நிலவியது.

Srilanka: 24 மணி நேரத்தில் விசா.. இனி இலங்கைக்கு ஈஸியா செல்லலாம்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 27 Sep 2024 07:42 AM

இலங்கை விசா: இலங்கை நாட்டில் மீண்டும் பழைய விசா வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளதாக புதிய இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசநாயக்க அறிவித்துள்ளார். தீவு நாடான இலங்கை மிகச்சிறந்த ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் ஆண்டுதோறும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இப்படியான நிலையில் இலங்கை நாட்டிற்கு வருவதற்கான விசா வழங்கும் பணியை வி.எஃப்.எஸ். நிறுவனம் மேற்கொண்டு வந்தது. ஆனால் அந்நிறுவன நடவடிக்கையால் வெளிநாட்டினர் மிகப்பெரிய அளவில் சிரமப்பட்டதாக தகவல் வெளியானது. அதேசமயம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தால் தொழில்நுட்ப முறைகள் மாற்றப்பட்டதால் இலங்கைக்கு விசா வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக விசா வழங்குவதில் சிக்கலும் ஏற்பட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், அங்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி உடனடியாக விசா வழங்கும் முறைக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது.

Also Read: Purattasi Saturday: ஏகாதசியுடன் வரும் புரட்டாசி சனிக்கிழமை.. என்ன செய்யலாம்?

இந்த நிலையில் இலங்கையில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் முதல் முறையாக இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் தலைவர் அனுரகுமார திசநாயக்க அபார வெற்றி பெற்றார். இவர் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி பதவியேற்ற நிலையில் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். தொடர்ந்து நவம்பர் 14ஆம் தேதி இலங்கையில் பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் இலங்கையில் பழைய விசாரணை அமலுக்கு வந்துள்ளதாக புதிய அதிபர் அநுர குமார திசநாயக்க அறிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கை வர விசா விண்ணப்பிப்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் விசா வழங்கப்பட உள்ளது. இதனை வெளிநாட்டவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் விஜிதா ஹெரத் தெரிவித்துள்ளார். அதே சமயம் வி எஃப் எஸ் நிறுவனம் விசா வழங்குவதில் செய்த முறைப்பீடு குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

மிகச் சிறந்த சுற்றுலாத்தலமான இலங்கையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அளவுக்கு வனவிலங்கு சரணாலயங்கள், வரலாற்று நினைவு சின்னங்கள், உள்நாட்டு கலாச்சார நிகழ்வுகள்  உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கிறது. இதனால் இந்திய சினிமாவின் படப்பிடிப்பு கூட பெரும்பாலும் அங்கு தான் நடைபெறுகிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பொருளாதாரம் சரிவை இலங்கை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு அதிரடி அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டது. அதன்படி இந்தியா உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலங்கைக்கு சுற்றுலா செல்ல விசா தேவை இல்லை என அறிவிக்கப்பட்டது.

Also ReadSenthil Balaji Release: முடிவுக்கு வந்த சிறைவாசம்.. ஜெயிலில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி!

கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பில் ஆறு மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் தங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்தியா, இங்கிலாந்து ,சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், டென்மார்க் ,போலந்து, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, கஜகஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து, ரஷ்யா, இந்தோனேசியா, தென் கொரியா, ஓமன், கத்தார், செக் குடியரசு, தாய்லாந்து, ஸ்வீடன், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் பழைய விசா நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த இலவச விசா அனுமதி விரைவில் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் இலங்கைக்கு இந்தியாவிலிருந்தும் சீனாவில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News