Nasa : விண்வெளியில் கேட்ட வினோத சத்தம்.. பதறிப்போன விண்வெளி வீரர்கள்.. நாசா கூறுவது என்ன?
Space Research | கடந்த ஜூன் 5 ஆம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், நாசா விண்வெளி வீரரும், முன்னாள் அமெரிக்க கடற்படை கேப்டனுமான புட்ச் வில்மோர் உடன் 3வது முறையாக விண்வெளிப் பயணம் மேற்கொண்டார்.
விண்வெளியில் வினோத சத்தம் : கடந்த ஜூன் 5 ஆம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், நாசா விண்வெளி வீரரும், முன்னாள் அமெரிக்க கடற்படை கேப்டனுமான புட்ச் வில்மோர் உடன் 3வது முறையாக விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். வெறும் 10 நாட்களில் இந்த பயணம் முடிவுக்கு வரும் என சொல்லப்பட்ட நிலையில் 50 நாட்களை கடந்தும் அவர் பூமிக்கு வந்தபாடில்லை. வழக்கமாக விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த அமெரிக்காவின் நாசா நிறுவனம் இம்முறை அந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதாக தெரிவித்து போயிங் நிறுவனத்திடம் கொடுத்தது. விமான தயாரிப்பில் முன் அனுபவம் கொண்ட போயிங், ஸ்டார் லைன் என்ற ஸ்பேஸ்ஷிப்பை தயாரித்து கொடுத்தது. இதில் தான் இருவரும் பயணம் மேற்கொண்டனர். ஜூன் 7 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்பும் பயணம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாசா வின்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஸ்பீக்கரின் மூலம் விசித்திரமான ஒலியை கேட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : Russian Spy : ரஷ்ய உளவாளி பெலுகா திமிங்கலம்.. நார்வேயில் சடலமாக கண்டெடுப்பு..வெளிநாடுகளின் சதி காரணமா?
மர்ம ஒலி கேட்டதாக தெரிவித்த நாசா விண்வெளி வீரர்கள்
சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் செயலிழந்த ஸ்டார்லைனைர் விண்கலத்தில் இருந்து மர்ம ஒலிகள் கேட்டதாக தெரிவித்தனர். அதன்படி துடிக்கும் சோனார் போன்ற ஒலி என விவரிக்கப்பட்ட இந்த ஒலி பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
A pulsing sound from a speaker in Boeing’s Starliner spacecraft heard by NASA astronaut Butch Wilmore aboard the International Space Station has stopped. The feedback from the speaker was the result of an audio configuration between the space station and Starliner. The space…
— NASA Commercial Crew (@Commercial_Crew) September 2, 2024
மர்ம ஒலி குறித்து நாசா விளக்கம்
இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாசா, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் கேட்ட போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் உள்ள ஸ்பீக்கரில் இருந்து துடிக்கு சத்தம் நிறுத்தப்பட்டது. அந்த வினோத சத்தம் விண்வெளி நிலையத்திற்கும் ஸ்டார்லைனருக்கும் இடையே உள்ள ஆடியோவின் விளைவாகும். விண்வெளி மையம் ஆடியோ அமைப்பு சிக்கலானது. அது பல விண்கலங்கள் மற்றும் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட அனுமதிக்கிறது என்று தெரிவித்துள்ளது.