5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Iran Attack Israel: ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்.. ஈரானால் நிலைகுலைந்த இஸ்ரேல்!

ஈரான் இஸ்ரேலிலேயே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் இதனால் ஈரான் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் எதிர்பார்த்தபடியே காஸா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தியத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் ஈரான் நடத்தி உள்ளது. 

Iran Attack Israel: ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்.. ஈரானால் நிலைகுலைந்த இஸ்ரேல்!
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் (photo courtesy: Twitter)
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 02 Oct 2024 05:07 AM

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காஸாவில் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் இந்த அமைப்பின் தலைவர் ஆன நஸ்ருல்லாவை விமானப்படை மூலம் குண்டு வீசி இஸ்ரேல் ராணுவ படையினர் கொன்றனர். இதனிடையே போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவுரை வழங்கிய நிலையில்  தெற்கு லெபனான் இஸ்ரேல் ராணுவத்தினரை குவித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் மீது தாக்குதலையும் நடத்தி வருகிறது. இந்த ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருவதால் இதனால் இஸ்ரேல் – ஈரான் மீது பயங்கரமான மோதல் போக்கு நீடித்து வந்தது.

Also Read: Mark Zuckerberg : 200 மில்லியன் டாலர் சொத்து.. உலகின் 4வது பணக்காரராக உருவெடுத்த மார்க் ஜூக்கர்பெர்க்!

இதனால் ஈரான் இஸ்ரேலிலேயே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் இதனால் ஈரான் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் எதிர்பார்த்தபடியே காஸா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தியத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் ஈரான் நடத்தி உள்ளது.

Also Read:  Viral Photo : சக்கர நாற்காலி வழங்காத விமான நிர்வாகம்.. கழிவறைக்கு தவழ்ந்து சென்ற செய்தியாளர்.. வைரல் புகைப்படம்!

டெல் அவிவ் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டதால் வான் எங்கும் ஏவுகணை சைரன்கள் ஒலித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களை குண்டு துளைக்காத முகாமில் சென்று தஞ்சமடையும்படி இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.  எக்காரணம் கொண்டும் மீண்டும் அறிவிப்பு வரும் வரை வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் களம் கண்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல் உலக நாடுகளிடையே மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். “ஈரான் மிகப்பெரிய வரலாற்று தவறை செய்து விட்டது. இதற்கு அவர்கள் விலை கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியடைந்துள்ளது. எங்களை பாதுகாப்பது மற்றும் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான உறுதியை அந்நாடு புரிந்துக்கொள்ளவில்லை” என தெரிவித்துள்ளார்.

அதேசமயம் எங்களுடன் மோத வேண்டும் என ஈரான் அரசு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்நாட்டின் அதிபர் மசூத் பெஸ்கியான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் ஈரான் மக்களின் நலனை பாதுகாக்கவே இந்த ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் மீது நடத்தப்பட்டதாகவும் ஈரான் போரை விரும்பவில்லை என ஸ்ரீ பிரதமர் பெஞ்சமின் நலன் யாவும் புரிந்து கொள்ள வேண்டும் எனவே எங்களுடன் மோதும் வேண்டாம். எந்த அச்சுறுத்த வந்தாலும் ஈரான் வலிமையாக எதிர்கொள்ளும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது .மேலும் தேவையற்ற வகையில் வெளியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News