Bus Accident : பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!
Death Toll | இந்த விபத்தில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மீண்டும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக இருந்த நிலையில், பிறகு அது 41 ஆக உயர்ந்ததாக மீண்டும் தகவல் வெளியானது.
நேபாள விபத்து : நேபாளத்தில் தனாஹூன் மாவட்டத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 40 பேருடன் சென்ற பேருந்து ஒன்று நேற்று ஆற்றில் கவிழ்ந்து கடும் விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து பெக்ராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்றுக்கொண்டிருந்துள்ளது. அப்போது சரியாக காலை 11.30 மணி அளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் சுமார் 11 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மீண்டும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக இருந்த நிலையில், பிறகு அது 41 ஆக உயர்ந்ததாக மீண்டும் தகவல் வெளியானது. இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Crime: காப்பீடு பணத்திற்கு ஆசைப்பட்ட கணவன்.. மனைவியின் உடலில் பாம்பு விஷத்தை செலுத்தி கொலை..
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்து பிரதமர் மோடி எக்ஸ் பதிவு
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்தின் தனாஹூன் மாவட்டத்தில் நடந்த விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Tanahun district, Nepal. The injured would be given Rs. 50,000. https://t.co/qUtVrj4ipF
— PMO India (@PMOIndia) August 24, 2024
104 இந்தியர்கள் 3 பேருந்துகளில் புனித யாத்திரை சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சிட்வான் மாவட்டத்தில் உள்ள பரத்பூர் மாவட்டத்தில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேருந்து 104 இந்தியர்களுடன் ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்துகளில் ஒன்று என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : PPF : மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.6.50 லட்சம் வரை வருமான ஈட்டலாம்.. பிபிஎஃப் முதலீடு!
மேலும் இந்த விபத்தில் லேசான காயமடைந்தவர்கள் காத்மண்டில் உள்ள திருபுவன பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.