Bangaladesh Riots: வங்கதேசத்தில் தொடரும் வன்முறை.. இந்துக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்.. பரபரப்பு!
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகும் வன்முறை நீடித்து வருகிறது. இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களது வீடுகள், கடைகள், அலுவலகங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. இந்து ஆலயங்கள் தகர்க்கப்பட்டன. சுமார் 200க்கும் மேற்பட்ட இந்து வீடுகளும், 20க்கும் மேற்பட்ட இந்து கோயில்களும் சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்துக்கள் மீது தாக்குதல்: வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகும் வன்முறை நீடித்து வருகிறது. இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களது வீடுகள், கடைகள், அலுவலகங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. இந்து ஆலயங்கள் தகர்க்கப்பட்டன. சுமார் 200க்கும் மேற்பட்ட இந்து வீடுகளும், 20க்கும் மேற்பட்ட இந்து கோயில்களும் சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க தேசத்துக்கு இந்தியா தான் சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்தது. இதனால் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான தலைவராக கேஷ் ஹசீனா இருந்து வந்தார். அவரது ஆட்சியில் இந்துக்கள் எந்தவித பிரச்னையையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படவில்லை. இந்த நிலையில், ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்தை விட்டு வெளியேறிய நிலையில், இந்துக்களுக்கு எதிராக போராட்டக்கார்கள் திரும்பியுள்ளனர். இப்பின்னணியில் தான் இந்துக்கள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளது. 2 இந்து கவுன்சிலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் வங்கதேசத்தில் பதற்றம் தணியாமலேயே உள்ளது.
Also Read: உடல் எடை.. சுற்றுகள்.. மல்யுத்தம் போட்டியில் விதிமுறை என்ன?
இடைக்கால அரசு:
வங்கதேசத்தில் நடந்த வன்முறை காரணமாக வங்கதேச பிரதம ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதைத் தொடர்ந்த இடைக்கால ஆட்சியமைக்க ராணுவம் அனைத்து கட்சிகளிடம் கோரிக்கை முன்வைத்த நிலையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தில் தகுதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க கோரி மாணவர்கள் போரட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் மாபெரும் வன்முறையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு நிலமை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நிலமை மோசமாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார்.
Also Read: வங்கதேசத்தில் அமையும் இடைக்கால அரசு.. புதிய தலைவராக முகமது யூனுஸ் தேர்வு.. யார் இவர்?
இருப்பினும், வங்கதேசத்தில் அடுத்து யார் ஆட்சியை அமைக்கப் போகிறார் என்பது தெளிவாக் தெரியாத நிலையில், அங்கு வன்முறை தொடர்ந்து வந்தது. இதற்கிடையில் வங்கதேசத்தில் இப்போது இடைக்கால அரசை வழிநடத்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வங்கசேத அதிபர் முகமது சஹாபுதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்கிறது.