Bangaladesh Protest: வங்கதேசத்தில் அமையும் இடைக்கால அரசு.. புதிய தலைவராக முகமது யூனுஸ் தேர்வு.. யார் இவர்?
வங்கதேசத்தில் நடந்த வன்முறை காரணமாக வங்கதேச பிரதம ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதைத் தொடர்ந்த இடைக்கால ஆட்சியமைக்க ராணுவம் அனைத்து கட்சிகளிடம் கோரிக்கை முன்வைத்த நிலையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தில் தலைமைக்கு வரும் முகமது யூனுஸ்: வங்கதேசத்தில் நடந்த வன்முறை காரணமாக வங்கதேச பிரதம ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதைத் தொடர்ந்த இடைக்கால ஆட்சியமைக்க ராணுவம் அனைத்து கட்சிகளிடம் கோரிக்கை முன்வைத்த நிலையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் தகுதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க கோரி மாணவர்கள் போரட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் மாபெரும் வன்முறையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு நிலமை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நிலமை மோசமாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார்.
இருப்பினும், வங்கதேசத்தில் அடுத்து யார் ஆட்சியை அமைக்கப் போகிறார் என்பது தெளிவாக் தெரியாத நிலையில், அங்கு வன்முறை தொடர்ந்து வந்தது. இதற்கிடையில் வங்கதேசத்தில் இப்போது இடைக்கால அரசை வழிநடத்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வங்கசேத அதிபர் முகமது சஹாபுதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Also Read: வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம்.. கலைந்த தங்கப் பதக்க கனவு.. உடைந்த இந்திய ரசிகர்கள்!
யார் இவர்?
ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு ஓடச் செய்த மாணவர் அமைப்பினர், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக 83 வயதாகும் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், தேர்வாகியுள்ளார். 1940ஆம் அண்டு சிட்டகாங்கில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள வாண்ட்ர்பில்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பொருளாதார நிபுணரும், வங்கியாளருமான இவர் கடந்த 1983ஆம் ஆண்டு கிராமின் வங்கியை நிறுவினார். வங்கியில் கடன் பெற தகுதியற்ற ஏழை மக்கள், தொழில்முனைவோருக்கு சிறு கடன் வழங்குவது தான் கிராமின் வங்கிகள். அந்த சமயத்தில் எந்த உலக நாடுகளிலும் இதுபோன்ற சிறு கடன் வழங்கும் நிதி அமைப்புகள் இல்லை. யூனுஸின் இந்த முயற்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.
வங்கதேச மக்களை வறுமையில் இருந்து விடுவிப்பதில் யூனுஸின் கிராமின் வங்கி பெரும் பங்காற்றியது. இதைத் தொடர்ந்து மற்ற பல நாடுகளிலும் இது தொடங்கப்பட்டது. இதற்காக 2006ஆம் ஆண்டு யூனுஸூக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றிருந்த யூனுஸ் கடந்த 2007ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொங்குவதாக அறிவித்தார். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதன்பிறகு தான் யூனுஸுக்கும் ஹசீனாவுக்கும் இடையேம் 2008ஆம் ஆண்டு முதல் பிரச்னை வெடித்தது. ஏழைப் பெண்களிடம் கடனை வசூலிக்க மோசமான வழிகளை யூனுஸ் பின்பற்றுவதாக ஹசீனா குற்றச்சாட்டியுள்ளார்.
Also Read: ஓட்டலில் வைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட 24 பேர் .. வங்கதேச வன்முறையில் அதிர்ச்சி சம்பவம்!
2011ல் யூனுஸின் வங்கி செயல்பாடுகளை ஹசீனா அரசு மறுபரிசீலனை செய்ய தொடங்கியது. மேலும் யூனுஸ் தனது நிறுவன ஊழியர்களுக்கான நல நிதியில் சட்ட விதிகளை பின்பற்றாமல் முறைகேடு செய்ததாக வங்கி நர்வாக இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 2013ல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நாட்டின் மிகப்பெரிய மொபைல் போன் நிறுவனமான யுனுஸின் கிராமின்டோன் நிறுவனம் பிரச்னைகளை சந்திக்கத் தொடங்கியது. யூனுஸ் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்தார் குறிப்பிடத்தக்கது.