Fabrizio Longo: மலையேறும்போது விழுந்த ஆடி கார் நிர்வாக தலைவர் உயிரிழப்பு!
இந்த ஆடி கார் நிறுவனத்திற்கு பிரத்யேகமாக ஒவ்வொரு நாட்டிலும் நிர்வாக தலைவர்கள் பணியாற்றி வருகின்றனர். அப்படியாக இத்தாலி நாட்டின் நிர்வாக தலைவராக ஃபேப்ரிசியோ லாங்கோ(Fabrizio Longo) என்பவர் பணியாற்றி வந்தார். 62 வயதான லாங்கோ கடந்த 2013 ஆம் ஆண்டு முதலாக ஆடி நிறுவனத்தின் இத்தாலி தலைவராக செயல்பட்டு வந்தார். இதனிடையே இவருக்கு தன்னுடைய ஓய்வு நாட்களில் மலையேற்றம் செல்வதில் விருப்பம் உண்டு என சொல்லப்படுகிறது.
பிரபல சொகுசு கார் நிறுவனமான ஆடியின் இத்தாலி யூனிட் தலைவர் மலையேற்றத்தின்போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையேற்றம் என்பது பலரின் பொழுதுபோக்கு விஷயங்களில் ஒன்று. உலகம் முழுவதும் இருக்கும் பிரபலமான சிகரங்களில் ஏற பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வருகை தருவார்கள். இவர்களில் பலர் வெற்றிகரமாக சிகரத்தின் உயரத்தை எட்டிப்பிடிப்பார்கள். சிலர் மலையுச்சி ஏறும்போது இறந்துபோவார்கள். இப்படியான நிலையில் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள விலை உயர்ந்த சொகுசு ரக கார் நிறுவனங்களில் ஒன்று ஆடி நிறுவனம்.
Also Read: Fixed Deposit : FD-களுக்கு 8.05% வரை வட்டி வழங்கும் தனியார் துறை வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
இந்த ஆடி கார் நிறுவனத்திற்கு பிரத்யேகமாக ஒவ்வொரு நாட்டிலும் நிர்வாக தலைவர்கள் பணியாற்றி வருகின்றனர். அப்படியாக இத்தாலி நாட்டின் நிர்வாக தலைவராக ஃபேப்ரிசியோ லாங்கோ(Fabrizio Longo) என்பவர் பணியாற்றி வந்தார். 62 வயதான லாங்கோ கடந்த 2013 ஆம் ஆண்டு முதலாக ஆடி நிறுவனத்தின் இத்தாலி தலைவராக செயல்பட்டு வந்தார். இதனிடையே இவருக்கு தன்னுடைய ஓய்வு நாட்களில் மலையேற்றம் செல்வதில் விருப்பம் உண்டு என சொல்லப்படுகிறது.
சமீபகாலமாக வார இறுதி நாட்களில் இத்தாலி – சுவிட்சர்லாந்து எல்லையில் உள்ள அடமெல்லோ மலைத்தொடரில் உள்ள சிமாபேயர் (Cima Payer) என்ற சிகரத்தில் ஏற முயற்சி எடுத்து நேற்று முன்தினம் அதனை செயல்படுத்தினார். ஆனால் சிகரத்தின் 10 ஆயிரம் அடி உயரத்தை தொட்ட லாங்கோ யாரும் எதிர்பாராத வகையில் சிகரத்த்தின் உச்சியைத் தொட சில அடிகள் மட்டுமே இருந்த நிலையில் தவறி விழுந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சக மலையேற்ற வீரர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து என்ன நடந்தது என விசாரணை நடத்தினர்.
Also Read: Know Yourself: ‘S’ல் தொடங்கும் பெயரைக் கொண்டவரா நீங்கள்..? கோபமும், பாசமும் உங்கள் குணம்!
பின்னர் நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் ஃபேப்ரிசியோ லாங்கோ உடல் 700 அடி கீழே ஒரு பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மீட்புக் குழு அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கரிசோலோவில் உள்ள மருத்துவமனைக்கு மீட்புக்குழுவினர் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் லாங்கோ மீட்கப்பட்ட போது, அவர் தனது மலையேற்றத்தில் உதவுவதற்காக கொண்டு வந்த இரும்பு கேபிள்கள் மற்றும் ஏணிகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு பொருட்களுடன் நன்கு பொருத்தப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவரது மரணம் தொடர்பான சந்தேகம் வலுத்து வருகிறது. அதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிந்ததும் லாங்கோவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேப்ரிசியோ லாங்கோ மறைவுக்கு பல துறைச் சார்ந்த நிபுணர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.