5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Russian Spy : ரஷ்ய உளவாளி பெலுகா திமிங்கலம்.. நார்வேயில் சடலமாக கண்டெடுப்பு..வெளிநாடுகளின் சதி காரணமா?

Beluga Whale | உளவாளிகள் பெரும்பாலும் மனிதர்களாக இருக்கும் பட்சத்தில், ரோபாடிக் மற்றும் சாட்டிலைட் மூலமாகவும் ஒரு நாடு மற்றொரு நாட்டை கண்காணிக்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெலுகா திமிங்கலம் ஒன்று ரஷ்யாவின் உளவாளியாக செயல்பட்டு வருவதாக உலக நாடுகள் கூறி வந்தன.

Russian Spy : ரஷ்ய உளவாளி பெலுகா திமிங்கலம்.. நார்வேயில் சடலமாக கண்டெடுப்பு..வெளிநாடுகளின் சதி காரணமா?
பெலுகா திமிங்கலம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 02 Sep 2024 18:43 PM

பெலுகா திமிங்கலம் உயிரிழப்பு : பொதுவாக ஒரு நாடு மற்றொரு நாட்டை கண்காணிக்க உளவாளிகளை வைத்திருக்கும். இத்தகைய உளவாளிகள் பெரும்பாலும் மனிதர்களாக இருக்கும் பட்சத்தில், ரோபாடிக் மற்றும் சாட்டிலைட் மூலமாகவும் ஒரு நாடு மற்றொரு நாட்டை கண்காணிக்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெலுகா திமிங்கலம் ஒன்று ரஷ்யாவின் உளவாளியாக செயல்பட்டு வருவதாக உலக நாடுகள் கூறி வந்தன. மேலும் வெளிநாடுகளை கண்காணிக்க ரஷ்யா அந்த திமிங்கலத்திற்கு பயிற்சி அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ரஷ்யாவின் உளவாளி என அழைக்கப்பட்ட அந்த திமிங்கலம் நார்வேயில் சடலமாக கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Israel – Gaza War : பிஞ்சு குழந்தைகளுக்காக போரை நிறுத்திய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்.. என்ன காரணம் தெரியுமா?

உளவு பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ள ரஷ்யா

ரஷ்யா பொதுவாக எள்ளை கடந்து உளவு பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நார்வேயில் திமிங்கலம் ஒன்று சிக்கியது. 14 அடி நீளமும், சுமார் 1224 கிலோ எடையும் கொண்ட அந்த பெலுகா வகை திமிங்கலம் ரஷ்யாவால் உளவு பார்க்க அனுப்பட்டதாக கூறப்பட்டது. ரஷ்யாவின் உளவாளி என அழைகப்படும்  அந்த திமிங்கலத்திற்கு ஹவால்டிமிர் என்று பெயர் சூட்டப்பட்டது.

மீனவர்களிடம் அன்பாக பழகும் ஹவால்டிமிர்

இதனை தொடர்ந்து அவ்வப்போது சில பகுதிகளில் இந்த பெலுகா திமிங்கலம் காணப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ரஷ்யாவின் உளவாளி என அழைக்கப்படும் இந்த திமிங்கலம் மீனவர்களிடம் நட்பாக பழகுமாம். இதனால் மீனவர்களுக்கு இந்த திமிங்கலத்தின் மீது தனி பாசமும் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இந்த பெலுகா திமிங்கலம் நார்வேயில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த திமிங்கலம் எப்படி உயிரிழந்தது என்ற தகவல் வெளியாகாத நிலையில், திமிங்கலத்தின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த கோரிக்கைகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Telegram : நாட்டை விட்டு வெளியேற தடை.. ரூ.46 கோடி பிணைத்தொகை.. கடும் நெருக்கடியில் டெலிகிராம் CEO!

பெலுகா திமிங்கலம் ரஷ்ய உளவாளியாக மாறியது எப்படி?

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த பெலுகா திமிங்கலம் மீனவர்கள் அதிகம் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது அந்த திமிங்கலத்தின் மீது கேமரா உள்ளிட்ட சில கருவிகள் பொருத்தப்பட்டிருந்துள்ளது. அந்த கருவிகளை சோதனை செய்து பார்த்ததில் அவை ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சிட்டி என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருந்ததால், அது ரஷ்யாவின் உளவானி என அழைகப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest News