29 OCT 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுதுவது, மன நலத்தை சீராக வைப்பது என ஒட்டுமொத்த உடல் இயக்கத்தை பாதுகாக்கும்
காளான்கள் சூரிய ஒளியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது, எனவே இதில் வைட்டமின் டியின் சிறந்த ஆதாரமாகும்
முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவில் வைட்டமின் டி சிறிய அளவில் உள்ளது. இதனால் மஞ்சள் கருவை தவிர்க்காமல் சாப்பிடுவது நல்லது
சூரிய ஒலியில் செல்ல முடியாதவர்கள் வைட்டமின் டி சப்லிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். இது உடலுக்கு தேவையான வைட்டமின் டியை பூர்த்தி செய்யும்
பால், தயிர் போன்ற பால் பொருட்கள் வைட்டமின் டியால் செறிவூட்டப்படுகிறது. இது உங்கள் உடலின் தினசரி வைட்டமின் டி தேவையை பூர்த்தி செய்யும்
சால்மன், டூனா, கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் வைட்டமின் டி சத்து அதிகமாக காணப்படுகிறது
சில காலை உணவுகள் அதாவது cereals, ஓட்ஸ், தானியங்களில் வைட்டமின் டி செறிவூட்டப்படுகிறது. இது தினசரி வைட்டமின் டி தேவையை பூர்த்தி செய்ய உதவும்