28 OCT 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
இந்தியாவில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மாரடைப்பால் இறந்து போகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதாவது இந்தியாவில் ஏற்படும் மொத்த மரணத்தின் எண்ணிக்கை 28% பேர் மாரடைப்பால் இறந்து போகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மது அருந்துவது, புகை பிடிப்பது மட்டுமல்லாமல் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் அதிகப்படியாக மாரடைப்பு வருவதாக கூறப்படுகிறது
உணவில் போதுமான அளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்துக்கொள்ளாத 98% பேருக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது
மேலும் இதய பரிசோதனை செய்யாமல் அதிகபடியாக உடற்பயிற்சி மேற்கொள்வதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது
மேலும் மன அழுத்தம், வேலை அழுத்தம் ஆகியவை இதய துடிப்பை அதிகரித்து மாரடைப்பு வர ஒரு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மது மற்றும் புகைப்பழக்கம் குறைப்பதோடு, அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்