27 August 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
கடந்த 2010ல் மலையாளத்தில் வெளியான நல்லவன் படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார் எஸ்தர் அனில்.
2013 ஆம் ஆண்டு ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தில் இளைய மகளாக நடித்து பிரபலமானார்.
அந்த படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் தமிழ் ரீமேக்கான பாபநாசம் உள்ளிட்ட படங்களிலும் எஸ்தர் அனில் தான் அந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
பாபநாசம் படத்தில் கமலின் இளைய மகளாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். மலையாளத்தில் வெற்றி பெற்றதை போல் இப்படம் தமிழும் வேற லெவல் ஹிட்டானது.
2021 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் 2ம் பாகத்திலும் எஸ்தர் அனில் கல்லூரி மாணவியாக நடித்து கலக்கினார்.
தமிழில் கமல்ஹாசன் பாபநாசம் 2 படத்தில் ஆர்வம் செலுத்தாத நிலையில், அந்த படம் உருவாகவில்லை.
இன்றும் தமிழ் ரசிகர்களுக்கு எஸ்தர் அனில் குழந்தை நட்சத்திரமாக தெரிந்தாலும் அவர் தற்போது நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
தமிழில் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மின்மினி படத்தில் நாயகியாக நடித்துள்ளார் எஸ்தர் அனில்.
2001-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி பிறந்த நடிகை எஸ்தர் அனில் இன்று தனது 23-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.