13 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
ரியல்மி நிறுவனம் தனது Realme P2 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மிட் ரேஞ் ஸ்மார்ட்போன் ரூ.25,000 வரை விற்பனை செய்யபப்டுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகா பிக்சல் கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் கூடிய LYT-600 பிரைமரி கேமரா அம்சத்தை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.7இன்ச் FHD+Curved Samsung AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 7s Gen2 சிப்செட் அம்சத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 5G, 4G LTE, Bluetooth 5.2, Wi Fi 6, GPS மற்றும் Type C அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த Realme P2 Pro ஸ்மார்ட்போனில் 5,200 mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் in - display fingerprint sensor அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.
8GB+128GB Realme P2 Pro ஸ்மார்ட்போன் ரூ.21,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 12GB+256GB Realme P2 Pro ஸ்மார்ட்போன் ரூ.24,999-க்கும் 12GB+512GB Realme P2 Pro ரூ.27,999-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனுக்கு Early Bird Sale மூலம் சிறப்பு தள்ளுபடிகளை வழங்க உள்ளது. அதாவது இந்த சேல் மூலம் ரூ.2,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.