17 September 2024
Pic credit - Freepik
Author : Mukesh
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களின் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2011ம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அஸ்வின், இதுவரை 100 போட்டிகளில் விளையாடி 516 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
அதேபோல் இந்திய அணிக்காக 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 156 விக்கெட்டுகளுடன் 707 ரன்களை எடுத்துள்ளார்.
இந்திய அணிக்காக 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 72 விக்கெட்டுகளுடன் 184 ரன்களையும் எடுத்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாடி வரும் அஸ்வின், 212 போட்டிகளில் விளையாடி 180 விக்கெட்டுகளை வீழ்த்தி 800 ரன்களையும் எடுத்துள்ளார்.
விரைவில் தொடங்கவுள்ள வங்கதேச தொடருக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் பல விக்கெட்களை வீழ்த்தி பல்வேறு சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.