15 September 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
நவம்பர் மாதம் 20-ம் தேதி 1994-ம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார் நடிகை பிரியங்கா மோகன்.
2019 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ஓந்து கதே ஹெல்லா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதே ஆண்டு தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்த பிரியங்கா மோகன், நானியின் நானிஸ் கேங் லீடர் என்ற படத்தில் நடித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக பிரியங்கா மோகன் அறிமுகமானார்.
டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவ கார்த்திகேயனுடன் டான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
இதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில்அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்தார்.
இறுதியாக தமிழில் தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார் பிரியங்கா மோகன். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
தெலுங்கில் நானியுடன் சரிபோதா சனிவாரம் படத்தில் நடித்துள்ளார் பிரியங்கா மோகன். இந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.