16 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
மோட்டோரோலா நிறுவனம் தனது அடுத்த மாடல் ஸ்மார்ட்போனான மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த மோட்டோ எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 1.5K pOLED LTPO டிஸ்பிளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேனல் 120Hz refresh rate கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 3,000 nits வரை பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனில் பாதுகாப்புக்காக கொரிலா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது.
இதில் OIS சப்போர்ட் உடன் கூடிய 50 மெகாபிக்சல் சோனி LYTIA 700C பிரைமரி சென்சார் கேமரா உள்ளது. மேலும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் மேக்ரோ கேமரா மற்றும் 10 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் அம்சமும் உள்ளது.
8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் ரூ.23,999-க்கு இந்தியாவில் அறிமுக செய்யப்பட்டுள்ளது.
இதற்கு இன்று (16.09.2024) மாலை 7 மணி முதல் பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.