11  June 2024

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்!

காலை உணவு மிகவும் முக்கியமான ஒன்று. வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கும் என்பதால் அதில் சிறப்பு கவனம் செலுத்தவும்

காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் சில உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்

வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது வயிற்றில் அமிலங்களைத் தூண்டி செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும்

வெறும் வயிற்றில் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல், அல்சர் ஏற்படலாம்

மசாலா அதிகம் நிறைந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல வயிறு சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தலாம்

கார்பனேற்றப்பட்ட பானங்கள் அருந்துவதால் வயிறு வலி, அசௌரியம், செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தலாம்

எனவே, காலையில் எழுந்தவுடன் முதலில் சுடுதண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. பின்னர், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் உலர் பழங்கள், ராகி மால்ட் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்

NEXT: ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கலாம்?