29 August 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
1986ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி டெல்லியில் சலீம் குரேசி மற்றும் அமீனா குரேஷி தம்பதியினரின் மகளாக பிறந்தார் ஹூமா குரேசி.
அமீர் கானுடன் சாம்சங் மொபைல் விளம்பரத்திலும், ஷாருக்கானுடன் நெரோலாக் விளம்பரத்திலும் நடித்து பாலிவுட் சினிமா இண்டஸ்டிரியில் பிரபலமானார்.
அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸேபூர் சீரிஸில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் ஹூமா குரேசி.
நடிகர் அஜித் குமாரின் பில்லா 2 படத்தில் நடிக்க கதாநாயகியாக தேர்வானார். ஆனால், தனது முதல் படமான பில்லா 2 இயக்கத் தாமதம் ஆனதால், உடனடியாக அந்தப் படத்தில் இருந்து விலகி, இந்திக்குச் சென்றுவிட்டார்.
2018-ம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தில் காலாவின் காதலி ஜரீனாவாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
ஹூமா குரேஷி. அதன்பின், ‘வலிமை’ திரைப்படத்தில், ‘சோபியா’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார்.
நடிகை ஹூமா குரேஷியின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.